"டாப் டக்கர்" ஆட்டத்தால் "டாப்"புக்குப் போன விராத் கோஹ்லி
அடிலெய்ட்: டுவென்டி 20 போட்டிகளில் பேட்டிங் சராசரியில் இந்தியாவின் விராத் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டுவென்டி 20 போட்டியில் சரமாரியாக அடித்து ஆடி அதகளம் புரிந்து 90 ரன்களைக் குவித்தது அவருக்கு உயர்வைக் கொடுத்துள்ளது.
55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்களைக் குவித்தார் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங் சராசரி
ஐசிசியின் டுவென்டி 20 போட்டிகளுக்கான கோஹ்லியின் பேட்டிங் சராசரி 48.08 ஆகும்.

அடியெல்ட் போட்டியால்
இதுகுறித்து ஐசிசியின் டிவிட்டில், அடிலெய்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் பேட்டிங் சராசரியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் கோஹ்லி என்று கூறப்பட்டுள்ளது.

ரன் குவிப்பாளரும் கூட
டுவென்டி 20 போட்டிகளில் இந்திய வீரர்களிலேயே அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் இருப்பவர் கோஹ்லிதான். அதாவது 31 போட்டிகளில் 1106 ரன்களை அவர் குவித்துள்ளார்.

10வது அரை சதம்
கோஹ்லி அடிலெய்டில் எடுத்த 90 ரன்கள் இவருக்கு 10வது அரை சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2010 முதல் 2020
20-20 போட்டிகளில் 2010 முதல் கோஹ்லி ஆடி வருகிறார். ஜிம்பாப்வே அணியுடன் நடந்த போட்டிதான் அவருக்கு முதல் போட்டியாகும்.

2வது இடத்தில் பின்ச்
பேட்டிங் சராசரியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 40 சராசரியுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

3வது இடத்தில் பாப் டூபிளஸிஸ்
3வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் பாப் டுபிளஸிஸ் 39.28 சராசரியுடன் உள்ளார். 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜேபி டுமினி (38.20) உள்ளார். 5வது இடம் மைக் ஹஸ்ஸிக்குக் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications