அஞ்சாமல் சந்திப்போம் ஆஸ்திரேலியாவை.. சுரேஷ் ரெய்னா
அடிலைட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டுவென்டி 20 போட்டி இன்று பிற்பகலில் நடைபெறவுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவை சற்றும் அச்சமின்றி சந்திப்போம் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
3 போட்டிகளைக் கொண்ட டுவென்டி 20 தொடர் இன்று தொடங்குகிறது. ஒரு நாள் தொடரை இந்தியா இழந்து விட்டதால், இந்தத் தொடரையாவது வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவைச் சந்திப்பதில் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்று ரெய்னா கூறியுள்ளார். முதல் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

பயமின்றி விளையாடும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி அச்சமின்றி விளையாடுகிறது. அதேபோல நாமும் அச்சமின்றி விளையாட வேண்டும். டுவென்டி 20 தொடரில் எந்த அச்சமும் இன்று அவர்களை நாமும் சந்திப்போம்.

சிறப்பாக விளையாடுவது முக்கியம்
இந்தத் தொடரை சிறப்பாக முடிக்க வேண்டியது முக்கியம். அதற்கு சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். அதே நோக்கத்தில்தான் அனைத்து வீரர்களும் உள்ளனர்.

அது முடிஞ்சு போச்சு
ஒரு நாள் தொடர் முடிந்து விட்டது. அதை மறந்து விட்டு இந்தத் தொடரைப் பற்றிக் கவனம் செலுத்த வேண்டும். ஆதிக்கம் செலுத்துவது எப்படி என்பது குறித்து யோசனை செய்ய வேண்டும்.

பாசிட்டிவ் அப்ரோச்
பாசிட்டிவான அப்ரோச் முக்கியமானது. நாம் சிறப்பாக விளையாட வேண்டும். சிறப்பாக விளையாடுவோம் என்றார் ரெய்னா.

17 ரன்கள் எடுத்தார்
29 வயதான ரெய்னா இன்னும் 17 ரன்கள் எடுத்தால் டுவென்டி 20 போட்டிகளில்1000 ரன்களைத் தொடுவார். அந்த சாதனையை இன்றைய போட்டியில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஒரு செஞ்சூரியன்
இந்திய அணியில் டுவென்டி 20 சர்வதேசப் போட்டிகளில் சதம் போட்ட ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications