இங்கி, ஆஸி, உடன் டி20 போட்டி.. உலகக்கோப்பைக்கு முன்னதாகவே.. ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பிசிசிஐ!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் இந்திய அணி போட்டிப் போடவுள்ளது.
Recommended Video
ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி போட்டிகள்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 17ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவிருக்கிறது. சூப்பர் 12 பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை வரும் அக்டோபர் 24ம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு
இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் அஸ்வின், ஜடேஜா, ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்களும், தீபக் சஹார், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற புதுமுக வீரர்களும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் ஏக்கம்
கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு ஐசிசி கோப்பைகளையும் வெல்லாமல் இருக்கும் இந்திய அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு பயிற்சி கொடுக்கும் வகையில் 2 போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டிகள் எப்போது
அதன்படி வரும் அக்டோபர் 18ம் தேதியன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும். இதே போல அக்டோபர் 20ம் தேதியன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் காணலாம் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications