Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 Worldcup: இங்கிலாந்து அணி அறிவிப்பு.. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸே இல்லை.. ரசிகர்கள் அதிருப்தி!

லண்டன்: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வீரர்களே இடம் பெறவில்லை.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நேற்று இரவு டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது.

இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்நிலையில் இங்கிலாந்து அணியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் போது இறுதிப்போட்டி வரை சென்று வெற்றியின் நுனிக்கு சென்ற போதும், கோப்பையை வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதனால் வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

வீரர்களின் விவரம்

வீரர்களின் விவரம்

இயான் மோர்கன், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

ரிசர்வ் வீரர்களாக டாம் கரண், லியாம் டாவ்சன், ஜேம்ஸ் விண்ஸ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஜோ ரூட்

ஜோ ரூட்

15 பேர் கொண்ட இந்த அணியில் இங்கிலாந்தின் மிக முக்கியமான வீரரான ஜோ ரூட் இணைக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 3 சதங்களை விளாசி, சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் ஜோ ரூட். ஆனால் அவர் சேர்க்கப்படாததற்கான காரணம் எதுவும் தற்போது வரை தெரிவிக்கவில்லை.

நட்சத்திர வீரர்

நட்சத்திர வீரர்

இதே போல நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பவுலர் ஆர்ச்சர் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. மன அழுத்தம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் நீண்ட நாட்களாக விடுமுறையில் இருக்கிறார். இதே போல ஜோஃப்ரா ஆர்ச்சரும் காயத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதால் அணியில் சேர்க்கப்படவில்லை.

Story first published: Thursday, September 9, 2021, 17:53 [IST]
Other articles published on Sep 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+