For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

T20 WorldCup:பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ப்ளேயிங் 11... கம்பீரின் அசத்தல் கணிப்பு.. அஸ்வினே இல்லை!

மும்பை: டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளாது.

டி20 உலகக் கோப்பை தொடர், இந்தியாவில்தான் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.

 டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.

பிரிவுகள்

பிரிவுகள்

குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியாவுக்கான போட்டிகள்

இந்தியாவுக்கான போட்டிகள்

இதில், இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11 குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கணித்துள்ளார். அதில், தொடக்க ஜோடியாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுலை தேர்வு செய்துள்ளார். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலியும் அடுத்தடுத்த விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

பவுலிங்கை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜாவுடன் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை கம்பீர் தேர்வு செய்துள்ளார். இதில் ஆச்சரிய விஷயமாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. உலகக்கோப்பை போன்ற பெரும் தொடர்களில் அஸ்வினுக்கு நல்ல அனுபவம் உள்ளது. எனினும் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துக்கொண்டே வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா

Story first published: Wednesday, September 15, 2021, 18:16 [IST]
Other articles published on Sep 15, 2021
English summary
Gambhir Predicts the Team India's probable squad for Match against Pakistan in T20WorldCup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+