T20WorldCup: கோலியுடன் கங்குலி திடீர் ஆலோசனை.. அதிரடி முடிவா? சீனியர் வீரர்களுக்கு வந்த சிக்கல்?
லண்டன்: டி20 உலகக்கோப்பை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா அடங்கிய மூத்த அதிகாரிகள் கேப்டன் விராட் கோலியிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
Recommended Video
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவில் முதலில் நடக்கவிருந்த உலகக்கோப்பை தொடர் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தொடருக்கான முழு அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அடங்கிய முதல் சூப்பர் 12 சுற்று அக்டோபர் 24ம் தேதி தொடங்குகிறது.

டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், அனைத்து அணிகளும் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், உலகக்கோப்பைகான 15 பேர் கொண்ட அணியையே அறிவித்துவிட்டது. மற்ற கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணி வீரர்களை ஓரளவிற்கு தேர்வு செய்துவிட்டது. விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.

காத்திருக்கும் பிசிசிஐ
ஆனால் பிசிசிஐ மட்டும், இன்னும் வீரர்கள் தேர்வில் மும்முரம் காட்டாமல் இருந்து வருகிறது. இந்த தொடருக்காக அனுபவ வீரர்கள் மட்டுமின்றி, புதுமுக வீரர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிசிசிஐ பொறுமை காப்பதற்கு காரணம் ஐபிஎல் தொடர் மட்டுமே ஆகும். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் ஆலோசனை
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம், பிசிசிஐ மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். லார்ட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது கங்குலி, ஜெய் ஷா ஆகியோர் அங்கு சென்றிருந்தனர். அப்போது அவர்கள் விராட் கோலியை நேரில் சந்தித்து அலோசனை மேற்கொண்டுள்ளனர்.

பிசிசிஐ-க்கு குழப்பம்
இந்த ஆலோசனையின் போது, ஐபிஎல் தொடரின் போது வீரர்களின் ஃபார்மையும், அவர்கள் அரப நாடுகளில் எப்படி செயல்படுவார்கள் என்பது உறுதியாகிவிடும். எனவே சீனியர் வீரர்களை அங்கு கன்ஃபார்ம் செய்துக் கொள்ளலாம். ஷிகர் தவான், மணிஷ் பாண்டே, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர், தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதே போல இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார், போன்ற வீரர்கள் சர்வதேச டி20ல் சோபிக்க தயார் நிலையில் உள்ளதால் பிசிசிஐ-க்கு சற்று கடினமான வேலை வந்துள்ளது.


Click it and Unblock the Notifications