For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கு தானா?.. மற்ற அணிகளை விட கூடுதல் சிறப்பு உள்ளது.. காரணம் என்ன?

லண்டன்: டி20 உலகக்கோப்பையை இந்த முறை பாகிஸ்தான் அணி தான் வெல்லும் என புள்ளி விவரங்களுடன் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவில் முதலில் நடக்கவிருந்த உலகக்கோப்பை தொடர் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தொடருக்கான முழு அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அடங்கிய முதல் சூப்பர் 12 சுற்று அக்டோபர் 24ம் தேதி தொடங்குகிறது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஓமன் நாட்டில் தகுதிச்சுற்று போட்டிகள் மட்டுமே நடைபெறுகிறது. சூப்பர் 12 லீக் ஆட்டங்கள் அனைத்தும் அமீரகத்தில் உள்ள சார்ஜா, அபுதாபி, துபாய் மைதானங்களில் நடைபெறவுள்ளது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், அனைத்து அணிகளும் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், உலகக்கோப்பைகான 15 பேர் கொண்ட அணியையே அறிவித்துவிட்டது. மற்ற கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணி வீரர்களை ஓரளவிற்கு தேர்வு செய்துவிட்டது. விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.

நிலவும் கடும் போட்டி

நிலவும் கடும் போட்டி

ஒரு சில அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளதால் இந்த முறையை யார் கோப்பையை வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் இந்த முறை டி20 உலகக்கோப்பையை வெல்ல பாகிஸ்தான் அணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

பாதுகாப்பு பிரச்னை காரணமாக பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் அயல்நாட்டு அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. எனவே பாகிஸ்தான் அணியுடனான போட்டிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தான் முதல் தேர்வாக பார்க்கப்படுகிறது.

அமீரகத்தில் உள்ள அனுபவம்

அமீரகத்தில் உள்ள அனுபவம்

பாகிஸ்தான் அணி கடந்த சில வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும் அளவிலான போட்டிகளை விளையாடியுள்ளது. எனவே அமீரகத்தில் உள்ள அனைத்து பிட்ச்களும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் மிகவும் பழக்கப்பட்டவை என்பதால் அந்த அணி சுலபமாக மற்ற அணிகளை வீழ்த்தி கோப்பையை வெல்லலாம்.

இமாத் வாசீம் நம்பிக்கை

இமாத் வாசீம் நம்பிக்கை

இதற்கேற்றார் போல அந்த அணியின் வீரர் இமாத் வாசிமும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதில், பாகிஸ்தான் அணி, பல வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தைதான் ஹோம் கிரவுண்டாக பயன்படுத்தி வருகிறது. இதனால், அங்கு இருக்கும் காலநிலை, மைதானத்தின் தன்மை அறிந்து எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். எனவே இந்த முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற எங்களுக்குத்தான் வாய்ப்பு அதிகம் எனக்கூறியுள்ளார்.

 தற்போதைய ஃபார்ம்

தற்போதைய ஃபார்ம்

ஒரு புறம் அனுபவத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு பிராகசமாக இருந்தாலும், அவர்களின் தற்போதை ஃபார்ம் கவலைக்கிடமாக உள்ளது. பாகிஸ்தான் அணி, கடந்த சில தொடர்களில் சிறப்பாக விளையாடவில்லை. கடைசியாக, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், பாபர் அசாமை தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் படுமோசமாக சொதப்பினர். எனவே அந்த அணி வீரர்கள் முழு பலத்துடன் களமிறங்கினால் நிச்சயம் கோப்பையை வெல்லும் எனெ என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, August 22, 2021, 22:29 [IST]
Other articles published on Aug 22, 2021
English summary
Pakistan have more chance to won a T20WorldCup this time, what is the advantage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+