Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20WorldCup: டூப்ளசிஸ், இம்ரான் தாஹீர் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லை.. ஷாக் கொடுத்த தென்னாப்பிரிக்கா

சென்னை: டி20 உலகக்கோப்பைகாக நட்சத்திர வீரர்கள் பலரும் இல்லாத அணியை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியான சூழலில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

அணி அறிவிப்பு

அணி அறிவிப்பு

அதன்படி முதல் ஆளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது அணியை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டன. நேற்றைய தினம் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பைகான தென்னாப்பிரிக்க அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இதனை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சி கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் மிக முக்கிய வீரர்களான ஃபாப் டூப்ளசிஸ், கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹீர் ஆகிய 3 பேருமே இடம் பெறவில்லை. டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இவர்கள் மூவரும் தான் அணியின் தூண்களாக பார்க்கப்படுகின்றனர்.

அசுர ஃபார்மில் டூப்ளசிஸ்

அசுர ஃபார்மில் டூப்ளசிஸ்

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பாஃப் டூப்ளசிஸ் தற்போது அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் கூட கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் சதம் விளாசி அசத்தினார். இதே போல வரும் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக டூப்ளசிஸ் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல தான் இம்ரான் தாஹீர் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோரும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். அவர்களை ஒதுக்கியுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி விவரம்

தென்னாப்பிரிக்க அணி விவரம்

தெம்பா பவுமா ( கேப்டன்) குயிண்டன் டிகாக், ஜார்ன் ஃபார்டூய்ன், ஹெயின்ரிச் க்ளாசென், கேசவ் மஹாராஜ், எய்டன் மர்க்ராம், டேவிட் மில்லர், வியான் மல்டர், லுங்கி நெகிடி, ஆண்ட்ரிச் நார்ட்ஜே, ட்வெயின் ப்ரெடோரியஸ், ககிஸ்கோ ரபாடா, டாப்ராய்ஸ் ஷாம்சி, சாசி வான் டெர் டுஸ்சேன்

Story first published: Thursday, September 9, 2021, 21:49 [IST]
Other articles published on Sep 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+