Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 WorldCup: இந்திய அணி விவரம் என்ன? சீனியர் வீரர்களுக்கு சிக்கல்.. புதிய திட்டம் போட்ட பிசிசிஐ!

மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி யார் யார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடர், இந்தியாவில்தான் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

சமீபத்தில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியாவுக்கான போட்டிகள்

இந்தியாவுக்கான போட்டிகள்

இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள், தங்களது வீரர்கள் விவரங்களை வெளியிட்டுவிட்டனர். அதே போல பிசிசிஐ-ம் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் முடிந்த பிறகு டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியை வெளியிடும் என கூறப்படுகிறது. அதன்படி இன்று அல்லது நாளை வெளியாகலாம்.

கசிந்தது தகவல்

கசிந்தது தகவல்

இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இந்திய அணியில் இடம்பெற போகும் வீரர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தம் போட்டிகளில் பங்கேற்பதற்காக மொத்தம் 15 பேர் கொண்ட குழுவும், 3 ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்படவுள்ளனர். மேலும் இந்த முறை இளம் வீரர்களுக்கு அதிகப்படியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர்

முக்கிய வீரர்கள் இல்லை

முக்கிய வீரர்கள் இல்லை

இந்த பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின் முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. ஷிகர் தவான் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை தொடரில் சிறாப்பாக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 6, 2021, 19:47 [IST]
Other articles published on Sep 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+