நீங்கள்தான் மாற வேண்டும்.. கிரிக்கெட் வீரர்களை பார்த்து டாப்ஸி சொன்ன ஒருவார்த்தை.. செம்ம அடி!
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் அரசுக்கு ஆதாரவாக கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் செய்த டிவிட்களை நடிகை டாப்ஸி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டம் சர்வதேச அளவில் வைரலாகி உள்ளது. ரிஹானா, மியா கலீபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் இது தொடர்பாக டிவிட் செய்து உள்ளனர். இந்த நிலையில் இந்த பிரபலங்களின் டிவிட்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாகவும் இந்திய பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, சச்சின் உள்ளிட்ட பலர் இதில் அரசுக்கு ஆதரவாகவும், வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராகவும் டிவிட் செய்துள்ளனர். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களின் இந்த நிலைப்பாட்டை நடிகை டாப்ஸி விமர்சனம் செய்துள்ளார்.

டாப்ஸி
இந்த நிலையில் நடிகை டாப்ஸி செய்துள்ள டிவிட்டில் ஒரே ஒரு டிவிட் உங்களின் ஒற்றுமையை குலைக்கிறது என்றால், ஒரு ஜோக் உங்கள் நம்பிக்கையை குலைக்கிறது என்றால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மதத்தை புண்படுத்துகிறது என்றால் நீங்கள்தான் உங்களின் நம்பிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.

என்ன சொன்னார்
இதை விட்டுவிட்ட மற்றவர்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லி பிரச்சாரம் செய்ய கூடாது, என்று டாப்ஸி பண்ணு டிவிட் செய்துள்ளார். கிரிக்கெட் வீரர்களை விமர்சனம் செய்யும் வகையில் டாப்ஸி இதை டிவிட் செய்துள்ளார். மற்றவர்களுக்கு நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

உலக பிரபலம்
உலக பிரபலங்களுக்கு பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு, உங்களின் அடையாளங்களை, நம்பிக்கைகளை வலுப்படுத்திடுங்கள் என்று டாப்ஸி குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட பாலிவுட், கிரிக்கெட் உலகில் எல்லோரும் அரசுக்கு ஆதரவாக டிவிட் செய்துள்ள நிலையில் டாப்ஸி மட்டும் தனியாளாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

கருத்து
இதனால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். டாப்ஸி பாருங்கள் எவ்வளவு தைரியமாக பேசுகிறார். உங்களால் அப்படி பேச முடியுமா? உங்களால் அவ்வளவு தைரியமாக கருத்தை சொல்ல முடியுமா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications