Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாண்டிங், லாராவைவிட சச்சின் ஆட்டம் சிறப்பு: ஷான் டெய்ட்

Tait rates Sachin above Ponting and Lara
மும்பை: ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா ஆகியோரைவிட சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் சிறப்பானது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷான் டெய்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷான் டெய்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், சச்சின் ஆகியோருக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் லாரா, பாண்டிங்கைவிட சச்சின் ஆட்டம் மேலானது. 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்தான் நான் கடைசியாக விளையாடியது. அந்தப் போட்டியில் 50 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தார் சச்சின். அவரது விக்கெட்டை வீழ்த்தியது நான்தான். அதில் இந்தியா எங்களை தோற்கடித்தது.

டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்தியது என்றும் மறக்க முடியாதது. முதலாவது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் தொடக்க வீரராக டெண்டுல்கர் களமிறங்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான தொடக்க பந்துவீச்சாளராக நான் இருந்தேன். அப்போது நாங்கள் இருவருமே நல்ல ஃபார்மில் இருந்தோம் என்றார்.

Story first published: Friday, October 25, 2013, 10:54 [IST]
Other articles published on Oct 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+