Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்

டெல்லி: கேப்டன் விராட் கோலி, மனைவி அனுஷ்கா சர்மா டிவிட்டரில் ஒரு போட்டோ போட அது உடனே வைரலாகி விட்டது. இது அவர் மட்டுமே சம்பந்தப்பட்ட போட்டோ கிடையாது.. குடும்பத்தோடு எடுத்த போட்டோதான்.

Recommended Video

Top 10 players with most catches in International cricket

அதாவது விராட் கோலி, அனுஷ்கா சர்மா மற்றும் குடும்பத்தினர் அமர்ந்து மோனோபாலி என்ற விளையாட்டு விளையாடியுள்ளனர். இதைத்தான் போட்டோ எடுத்துப் போட்டுள்ளார் அனுஷ்கா சர்மா.

எல்லோரையும் போலவே விராட்டும், அனுஷ்காவும் வீட்டோடு அடைந்து கிடக்கின்றனர். ஏதாவது போட்டோ போட்டு, கதை பேசி பொழுது போய்க் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வந்து சேர்ந்துள்ளது இந்த புகைப்படம்.

அனுஷ்கா சர்மாவின் புகைப்படம்

அனுஷ்கா சர்மாவின் புகைப்படம்

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா. நிதியுதவியும் அளித்துள்ளனர். இந்த நிலையில் ஒரு புதிய போட்டோவை போட்டுள்ளார் அனுஷ்கா சர்மா. அதில் குடும்பத்தோடு அமர்ந்து மோனோபாலி ஆட்டம் ஆடுவது போல அதில் உள்ளது. படு ஜாலியாக குடும்பத்தினர் இந்த விளையாட்டை விளையாடியுள்ளனர். முகங்களைப் பார்த்தாலே அது தெரிகிறது.

பெருமையுடன் ஒரு டிவீட்

பெருமையுடன் ஒரு டிவீட்

கூடவே ஒரு அருமையான கேப்ஷனும் போட்டுள்ளார் அனுஷ்கா. அதில், நமக்கு எப்படி நடக்க வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், எப்படி அடுத்தவர்களை மதிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்தவர்களுடன் இணைந்து ஆடிக் கொண்டுள்ளோம். இந்த உலகத்தை எப்படி சந்திக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தவர்கள் இவர்கள் என்று பெருமையுடன் கூறியுள்ளார் அனுஷ்கா சர்மா.

பாதுகாப்பா வீட்டோடு இருங்க

அனைவரும் வீடுகளிலேயே இருங்கள். உங்களையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்தப் போட்டி செமையாக இருந்தது. கடும் போட்டியும் கூட. யார் ஜெயிச்சான்னு உங்களால கெஸ் பண்ண முடியுதா என்றும் கேட்டுள்ளார். யார் ஜெயிச்சாங்களோ தெரியாது.. கண்டிப்பாக அனுஷ்காவுக்கு விராட் விட்டுக் கொடுத்திருப்பானு நம்பலாம்.. விட்டுக் கொடுக்காம இருந்துர முடியுமா என்ன!

விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும்

விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும்

மறுபக்கம் விராட் கோலியும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கிறார். கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு லைவ் போட்டார். அப்போது பல கேள்விகளுக்கு ஜாலியாக பதிலலித்தார். அப்போது அவர் கூறுகையில், நானும் அனுஷ்காவும் இதுவரை ரொம்ப நாட்கள் ஒரே இடத்தில் இருந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக நீண்ட நாட்கள் சேர்ந்து இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

Story first published: Wednesday, April 8, 2020, 12:29 [IST]
Other articles published on Apr 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+