Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு!

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது.

இந்தியாவின் இந்த இமாலய சாதனைக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் டைரக்டர் கவுதம் மேனன், நடிகர்கள் சித்தார்த், தர்ஷன் தியாகராஜா உள்ளிட்ட நடிகர்களும் தங்களது பாராட்டுக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இன்றைய தினம் 4வது போட்டியுடன் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி கொண்டு தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கவுதம் மேனன் பாராட்டு

தமிழ் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். டைரக்டர் கவுதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மைதானத்தில் கொடியுடன் இந்திய வீரர்கள் வலம் வந்தது கண்ணீரை வரவழைத்தது என்றும் இந்த வெற்றி மூலம் இந்த ஆண்டு சிறப்பாக துவங்கியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

நடிகர் தர்ஷன் பாராட்டு

இந்நிலையில் நடிகர் தர்ஷன் தியாகராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் நம்ப முடியாத தொடராக இந்த தொடர் அமைந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணி டெஸ்ட்டின் சிறப்பான போட்டியை நமக்கு அளித்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

நடிகர் சித்தார்த் பாராட்டு

நடிகர் சித்தார்த்தும் தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மறக்க முடியாத தரமான போட்டி என்று அவர் பாராட்டியுள்ளார். 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன மோசமான போட்டியிலிருந்து இத்தகைய வெற்றியை இந்திய சாம்பியன்கள் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, January 19, 2021, 18:26 [IST]
Other articles published on Jan 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+