Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக கிரிக்கெட் வீரர் ஜெகதீசன் 4 உலக சாதனை.. கோலி, ரோகித் சாதனை முறியடிப்பு.. CSK நீக்கம் காரணமா?

பெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் ஜெகதீசன் 2 உலக சாதனை படைத்துள்ளார். அருணாச்சல் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜெகதீசன் 277 ரன்களை விளாசி உலக சாதனை படைத்தார்.

விஜய் ஹசாரோ தொடர் தொடங்கும் முன் நடைபெற்ற ஐபிஎல் அணிகள் வீரர்களை விடுவித்தது. இதில் சிஎஸ்கே அணி ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தது.

இதன் காரணமாக, கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீசன், தனது கோபத்தை கிரிக்கெட் மைதானத்தில் காட்டினார். அதில், விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்ற அவர், தொடர்ந்து 4 சதங்களை விளாசி இருந்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதன் மூலம் விராட் கோலி, ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரின் சாதனையை ஜெகதீசன் சமன் செய்த நிலையில், இன்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் அருணாச்சல பிரதேச அணியை தமிழக அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய அருணாச்சல பிரதேச அணி பந்துவிச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஜெகதீசன், சுதர்சன் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

5 முறை சதம்

5 முறை சதம்

ஒரு கட்டத்தில் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் அருணாச்சல பிரதேச வீரர்கள் தடுமாறினர். 76 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்த ஜெகதீசன், உலக அளவில் தொடர்ந்து 5 முறை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து தனது ரன் அடிக்கும் வேகத்தை கார்களுக்கு கியர் மாற்றுவது போல் அதிகரித்த ஜெகதீசன், 114 பந்துகளில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

அத்துடன் ஜெகதீசன் நிறுத்தவில்லை. தொடர்ந்து சிக்சர்களை பறக்கவிட, 129 பந்துகளில் 250 ரன்களை கடந்தார். அதன் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய ரோகித் சர்மாவின் சாதனையையும் ஜெகதீசன் முறியடித்தார். 141 பந்துகளை எதிர்கொண்ட ஜெகதீசன் 277 ரன்களை விளாசி, உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

இதே போன்று உலக அளவில் ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் சேர்த்து, புதிய சாதனையை ஜெகதீசன், சுதர்சன் ஜோடி படைத்தது. இதன் மூலம் தமிழக அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 506 ரன்கள் சேர்த்து புதிய உலக சாதனை படைத்தது. உலக அளவில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் 277 ரன்களுடன் ஜெகதீசன் முதல் இடத்திலும், ஏடி பிரவுன் 268 ரன்களுடன் 2வது இடத்திலும், ரோகித் சர்மா 264 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Monday, November 21, 2022, 13:46 [IST]
Other articles published on Nov 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+