
இடமில்லை
ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணியில் ஷாரூக்கான் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ஷாரூக்கான் துவண்டு போகவில்லை. அதற்கு பதில் என்ன செய்தால் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று யோசித்தார்.

சுழற்பந்துவீச்சு
அப்போது, இந்திய அணியில் உள்ள டாப் பேட்ஸ்மேன்கள் யாருக்கும் சுழற்பந்துவீச தெரியாது. இதனால் தாம் சுழற்பந்துவீச கற்று கொண்டால், அணியில் தமக்கு இடம் கிடைப்பதில் சாதகமாக இருக்கும் என்று முடிவு எடுத்தார். ஷாரூக்கான் நல்ல உயரம் என்பதால், அவர் சுழற்பந்துவீசும் போது, அது நல்ல பவுன்சை தந்து பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியை தரும்.

பயிற்சி வீடியோ
இதனால் தற்போது பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு என இரண்டுக்கும் பயிற்சி எடுத்து வருகிறார் இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷாரூக்கான் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், தமிழக வீரர் ஷாரூக்கானும், சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோரூம் இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்று வீரராக தேர்வு
வீரர்களுக்கு காயம் இல்லை கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு பதிலாக பிரதான அணியில் இவ்விருவரும் இடம்பெறுவார்கள். ஷாரூக்கான் தனது சுழற்பந்துவீச்சு திறனை மெருகேற்றி கொண்டால், அது இந்திய அணிக்கு செம பிளஸ் பாயின்டாக இருக்கும். ஐ.பி.எல். தொடரில் ஷாரூக்கானின் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











