Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மெகா ஏலம்.. தமிழக வீரர்களை குறிவைத்த சிஎஸ்கே..!! களத்தில் 30 தமிழக வீரர்கள்..!!

பெங்களூரு: இன்று தொடங்க உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் 30 தமிழக வீரர்கள் போட்டி போட உள்ளனர். இதில் தமிழக வீரர் ஷாரூக்கான் காட்டில் கோடிகள் கொட்ட போகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் தமிழக வீரர்களை குறிவைத்து ஏலத்தில் தூக்க உள்ளனர்.

இதற்கு காரணம், சையது முஸ்தாக் அலி தொடர் மற்றும் விஜய் ஹசாரே என வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நாட்டிலேயே சிறந்த அணியாக தமிழகம் விளங்குவதால் அனைத்து அணிகளின் கண்களும் தமிழகம் பக்கம் திரும்ப உள்ளது.

ஷாரூக்கான்

ஷாரூக்கான்

அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கும் ஷாரூக்கான் தனது அடிப்படை விலையை 40 லட்சமாக நிர்ணயித்துள்ளார். ஆனால் கடந்த முறையே ஷாரூக்கான் 5 கோடி ருபாய்க்கு மேல் சென்ற நிலையில், இன்று அவருக்கு பல்வேறு அணிகளும் கடும் போட்டி போடும். இதனால் அவரது விலை 12 கோடியை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஷாரூக்கான் பெயர் இன்றே ஏலத்தில் வரும்.

தினேஷ், வாசிங்டன்

தினேஷ், வாசிங்டன்

இதே போன்று தமிழக அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான தினேஷ் கார்த்திக், தனது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார். தினேஷ் கார்த்திக்கை சென்னை அணியே இம்முறை தட்டி தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாசிங்டன் சுந்தரை சிஎஸ்கே அணி இம்முறை குறிவைத்து தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது அடிப்படை விலையை ஒன்றரை கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார்.

நடராஜன்,முரளி விஜய்

நடராஜன்,முரளி விஜய்

வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், தனது அடிப்படை விலையை ஒரு கோடியாக நிர்ணயித்துள்ளார்.நடராஜன் காயத்திலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். வார்னர் செல்லும் அணிக்கு நடராஜன் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இதே போன்று தமிழக வீரர் முரளி விஜய் மற்றும் விஜய் சங்கர் தங்களது பெயரை ஆல்ரவுண்டர் வரிசையில் இணைத்துள்ளனர். அவர்களது ஆரம்ப விலை 50 லவட்சமாகும்.

Recommended Video

IPL Auction 2022 | அசரவைக்கப்போகும் 10 முன்னணி வீரர்கள் | Oneindia Tamil
சிஎஸ்கே வீரர்கள்

சிஎஸ்கே வீரர்கள்

சி.எஸ்.கே. வீரர்களான ஹரி நிஷாந்த், சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை 20 லட்சம் ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். தமிழக வீரர் சாய் கிஷோர், சித்தார்த் ஆகியோர் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களாக விளங்குவதால், இவ்விருவருக்கும் கோடிகள் கொட்ட வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, February 12, 2022, 1:36 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+