For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழ்நாடு பிரீமியர் லீக் இன்று தொடக்கம்.. எந்தெந்த அணிகள், என்று, எங்கு மோதுகின்றன? முழு விவரம்

By Veera Kumar

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 18ம் தேதிவரை பல்வேறு அணிகள் மோதிக்கொள்ள உள்ளதால், அனல் பறக்க உள்ளது இந்த தொடர்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்சுக்கு 2 வருடம் தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த அணி உரிமையாளரான இந்தியா சிமெண்ட்சின், சீனிவாசன், முயற்சியால் தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற டி20 தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது.

Tamil Nadu Premier League 2016 schedule

தொடருக்கான கோப்பையை சமீபத்தில் இந்திய அணி கேப்டன் டோணி அறிமுகம் செய்து வைத்தார். சேப்பாக்கம், மதுரை, தூத்துக்குடி, கோவை, திண்டுக்கல், காரைக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய அணிகள் மோத உள்ளன. ஒவ்வொரு அணியிலும் முன்னணி வீரர்களுடன், உள்ளூரில் திறமையாக உள்ள வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

இந்த போட்டித்தொடர், திறமையான கிராமப்புற இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் நம்புகிறார்கள்.

இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் துவக்க விழாவில் சினிமா ஸ்டார்கள் பங்கேற்கிறார்கள்.

இதையடுத்து முதல் போட்டியும் நடைபெறுகிறது. போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், நாடு முழுக்க போட்டி பிரபலமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லா போட்டிகளும் மதியம் மற்றும் மாலை நேரங்களில் நடைபெறுகிறது. போட்டி குறித்த கால அட்டவணையை பாருங்கள்:

நாள் அணிகள் நேரம் இடம்

ஆகஸ்ட்-24: சேப்பாக்கம் vs தூத்துக்குடி 6.30 சிதம்பரம் மைதானம் சென்னை

ஆகஸ்ட்-25: திருவள்ளூர் vs காரைக்குடி 6.30 என்.பி.ஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல்

ஆகஸ்ட்- 26: கோவை vs காஞ்சீபுரம் 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

ஆகஸ்ட்- 27: திண்டுக்கல் vs மதுரை 6.30 என்.பி.ஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல்

ஆக. 28: சேப்பாக்கம் VS காரைக்குடி 6.30 என்.பி.ஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல்

ஆக. 29: திருவள்ளூர் VS மதுரை 6.30 என்.பி.ஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல்

ஆக. 30: திண்டுக்கல் VS காஞ்சீபுரம் 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

ஆக. 31: கோவை vs தூத்துக்குடி 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

செப்டம்பர் 1: திண்டுக்கல் vs திருவள்ளூர் 6.30 இந்தியா சிமென்ட் கம்பெனி மைதானம், நெல்லை

செப்டம்பர் 2: மதுரை vs கோவை 6.30 இந்தியா சிமென்ட் கம்பெனி மைதானம், நெல்லை

செப்டம்பர் 3: காஞ்சீபுரம் vs சேப்பாக்கம் 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

செப். 4: திண்டுக்கல் vs தூத்துக்குடி 6.30 இந்தியா சிமென்ட் கம்பெனி மைதானம், நெல்லை

செப். 5: திருவள்ளூர் vs காஞ்சீபுரம் 2.30 இந்தியா சிமென்ட் கம்பெனி மைதானம், நெல்லை

செப். 5: கோவை vs சேப்பாக்கம் 6.30 இந்தியா சிமென்ட் கம்பெனி மைதானம், நெல்லை

செப். 6: மதுரை vs காரைக்குடி 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

செப். 7: திருவள்ளூர் VS தூத்துக்குடி 6.30 என்பிஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல்

செப். 8 : திண்டுக்கல் VS சேப்பாக்கம் 6.30 என்பிஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல்

செப்.9: மதுரை vs காஞ்சீபுரம் 2.30 என்பிஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல்

செப். 9: காரைக்குடி vs கோவை 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

செப்.10: மதுரை VS சேப்பாக்கம் 2.30 என்பிஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல்

செப். 10: திருவள்ளூர் vs கோவை 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

செப்.11: திண்டுக்கல் vs காரைக்குடி 2.30 என்பிஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல்

செப். 11: காஞ்சீபுரம் vs தூத்துக்குடி 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

செப்.12: திருவள்ளூர் vs சேப்பாக்கம் 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

செப். 13: திண்டுக்கல் vs கோவை 2.30 இந்தியா சிமென்ட் மைதானம், நெல்லை

செப்.13: தூத்துக்குடி vs மதுரை 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

செப்.14: காரைக்குடி vs காஞ்சீபுரம் 6.30 இந்தியா சிமென்ட் மைதானம், நெல்லை

செப். 16: முதலாவது அரையிறுதி போட்டி 6.30 இந்தியா சிமென்ட் மைதானம், நெல்லை

செப். 17: இரண்டாவது அரையிறுதி போட்டி 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

செப். 18: இறுதி போட்டி 6.30 சிதம்பரம் மைதானம், சென்னை

Story first published: Wednesday, August 24, 2016, 11:02 [IST]
Other articles published on Aug 24, 2016
English summary
Tamil Nadu Premier League 2016 schedule: Fixtures, TV listings, dates, time, venues
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+