ஐபிஎல் ஏலம்: தமிழக வீரர் நடராஜனை ரூ.3 கோடி கொடுத்து வாங்கிய பஞ்சாப்!
பெங்களூர்: 10வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூரிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தங்கராசு நடராஜன் ரூ.3 கோடி என்ற விலைக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். டி.நடராஜன் என்ற பெயரில் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவர். தமிழ்நாடு பிரீமியர் லீக், ரஞ்சி போட்டிகளில் திறமையை நிரூபித்த இவர்தான், காலை 11.45 மணி வரையிலான நிலவரப்படி அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் ஆகும்.
இவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.3 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளராகும்.


Click it and Unblock the Notifications