Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்களும் ஆகலாம் அடுத்த தோனி, கோலி.. வாய்ப்பை வழங்கும் TSPL தொடர்.. இதை கவனீங்க

ஒரு காலத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களையும் சிறுவர்களையோ பார்த்து நீங்கள் என்ன பெரிய சச்சினா போய் படிக்கிற வேலையை பாருங்கடா என்று பலரும் கேட்டிருப்பார்கள். ஏனென்றால் தெருவில் விளையாடும் இளைஞர்கள் பலரும் தங்களது தெருவையோ இல்லை ஊரையோ தாண்டி எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்கள்.

அது தங்களின் வாழ்வில் ஒரு சிறு பகுதியாகவே அமைந்து விடும். இந்த சூழலில் இப்படி இருக்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் திறமையை ஊக்குவித்து நாட்டுக்காக விளையாட வைக்க தொடங்கப்பட்ட தொடர் தான் தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ஆகும்.

TSPL Cricket

இந்த தொடரின் முதல் பகுதி திருச்சியில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் முதல் மண்டல நாக்கவுட் போட்டியில் தோட்டம் பாய்ஸ் என்ற அணி வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது மண்டல போட்டிகளுக்கான தகுதி தேர்வு சென்னையில் நடைபெற்றது.

இதில் 215 வீரர்கள் பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இதில் எந்த வீரர்கள் சிறந்த விளையாடுகிறார்கள் என்பதை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரியும் சதீஷ் சடகோபன் மற்றும் பிரேம் ஆனந்த் ஆகியோர் கண்டறிந்தனர். இதில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை இந்த குழு தேர்வு செய்தது எதிர்காலத்தில் நாட்டுக்காக விளையாட வைக்க, இதுபோன்ற தெருவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக இந்த தொடர் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இரண்டாவது தகுதி தேர்வு வரும் மார்ச் 29ஆம் தேதி அரக்கோணத்தில் நடைபெறுகிறது. இதில் ராணிப்பேட்டை, அரக்கோணம், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்களுடைய அணியை முன் பதிவு செய்து கொண்டு பயிற்சி தேர்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முன்பதிவு மற்றும் மேலும் தகவல்களுக்கு 91 1732351339 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

Story first published: Monday, March 24, 2025, 21:05 [IST]
Other articles published on Mar 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+