
தமிழ்
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி மேற்கொண்டு வரும் வலைப்பயிற்சியில் தமிழ் மொழி முக்கியமான இடம் பிடித்துள்ளது. பொதுவாக வலை பயிற்சியின் போது வீரர்கள், பயிற்சியாளர்களை இந்தியில்தான் பேசுவார்கள். வீரர்கள் எப்படி பவுலிங் செய்ய வேண்டும், பேட்டிங் பிடிக்க வேண்டும் என்று இந்தியில்தான பயிற்சியாளர்கள் கூறுவார்கள்.

தமிழ்
ஆனால் இந்த முறை பயிற்சி ஆட்டத்தில் தமிழ் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முறை வலை பயிற்சியில் நடராஜன், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் பவுலிங் செய்து வருகிறார்கள். இவர்கள் மூவரும் பவுலிங் செய்யும் போது இந்திய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஸ்ரீதர் தமிழில்தான் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

பீல்டிங்
ஸ்ரீதர் பீல்டிங் கோச் என்றாலும் இந்திய பவுலர்களுக்கும் இவர் அறிவுரை வழங்குவார். பொதுவாக இந்தியில் அறிவுரை வழங்கும் இவர் மூன்று தமிழக வீரர்களுக்கும் தமிழில் அறிவுரை வழங்குகிறார். முன்பெல்லாம் பவுலருக்கு இந்தியில் கோச் அறிவுரை வழங்கும் போதே அதை பேட்ஸ்மேன்கள் கேட்டு, அதற்கு ஏற்றபடி தயார் ஆவார்கள்.

ஆனால்
இதனால் பந்து எப்படி வரும் என்று முன்பே பேட்ஸ்மேன்களுக்கு தெரிந்துவிடும். ஆனால் நடராஜன், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர்மூவருக்கும் தமிழில் அறிவுரை வழங்கப்படுகிறது. இதனால் இவர்கள் பந்தை எப்படி போட போகிறார்கள் என்று தெரியாமல் பேட்ஸ்மேன்கள் குழம்பி உள்ளனர். முக்கியமாக கோலி, புஜாரா, ரஹானேவிற்கு இவர்கள் பவுலிங் செய்து வருகிறார்கள்.

ஆதிக்கம்
இப்படி இவர்களுக்கு தமிழில் அறிவுரை வழங்குவதை அணி நிர்வாகமும் ஊக்குவிக்கிறது. அப்போதுதான் பவுலர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகளை பேட்ஸ்மேன்கள் கேட்காமல் இருக்க முடியும். இது ஒரு விதத்தில் நல்லதுதான் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக வீரர்களும் இதனால் எளிதாக பயிற்சி மேற்கொள்ள முடிகிறது.


Click it and Unblock the Notifications
