For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் கிரிக்கெட்டில் 500 ரன்கள்.. உலக அளவில் தமிழக கிரிக்கெட் அணி புதிய சாதனை..2 சாதனை முறியடிப்பு

பெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் அணி புதிய சாதனையை படைத்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழக அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதியது.

இதில், டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி, தங்கள் வாழ்நாளில் பெரிய தவறை செய்தது. ஆம், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்யாமல், பந்துவீச்சை தேர்வு செய்தனர்.

வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், பந்து நன்கு ஸ்விங் ஆகும். இதை வைத்து தமிழக அணியை எளிதில் சுருட்டி விடலாம் என தப்பு கணக்கு போட்டனர்.

தவறான முடிவு

தவறான முடிவு

ஆனால், தமிழக அணியின் சுதர்சனும், ஜெகதீசனும் இன்று வேறு ஐடியாவில் இருந்தனர். முதலில் ஸ்விங் ஆன பந்துக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்தனர். பிறகு பந்து என்னால் இனி முடியாது என்று ஸ்விங் ஆனதை நிறுத்தி கொண்டது. இதன் பின்னர், ஜெகதீசனும், சுதர்சனும், அருணாச்சல பிரதேச வீரர்கள் தங்கள் வாழ்நாளில் கிடைக்காத தண்டனையை கொடுத்தனர்.

15 சிக்சர்கள்

15 சிக்சர்கள்

வீசும் பந்து எல்லாம் பவுண்டரி, சிக்சருக்கு செல்ல ஜெகதீசன், 141 பந்துகளில் 277 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தார். இந்த இன்னிங்சில் ஜெகதீசன் 25 பவுண்டரிகளையும், 15 சிக்சர்களையும் விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று இருந்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார். இந்த இன்னிங்சில் இதன் மூலம் நடப்பு தொடரில் 6 இன்னிங்சில் விளையாடி ஜெகதீசன் 799 ரன்களை குவித்துள்ளார்.

416 ரன்கள் கூட்டணி

416 ரன்கள் கூட்டணி

இதில் 5 சதம், 1 அரைசதம் அடங்கும். இதே போன்று சாய் சுதர்சனும் 102 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்களை விளாசினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 416 ரன்களை குவித்தது. இதன் மூலம் உலக அளவில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து பாபா அப்ரஜித், பாபா இந்தரஜித் ஆகியோர் தலா 31 ரன்கள் விளாசினர்.

தமிழக அணி 506 ரன்கள்

தமிழக அணி 506 ரன்கள்

இதன் மூலம் தமிழக அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் எடுத்தது. உலக அளவில் நடைபெற்ற அனைத்து விதமான ஒருநாள் போட்டியில் இதற்கு முன் இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தமிழக கிரிக்கெட் அணி உடைத்தது. தமிழக அணி 506 ரன்களுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 498 ரன்களுடன் 2வது இடத்திலும், சர்ரே 496 ரன்களுடன் 3வது இடத்திலும், இங்கிலாந்து அணி 481 ரன்களுடன் 4வது இடத்திலும், இந்தியா ஏ அணி 458 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளன.

Story first published: Monday, November 21, 2022, 14:52 [IST]
Other articles published on Nov 21, 2022
English summary
Tamilnadu became first team in world list a cricket to score 500 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+