Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாட்டு துறைக்கான தமிழக பட்ஜெட்.. சட்டசபையை அதிரவிட்ட பிடிஆர்.. சென்னைக்கு வரவுள்ள புதிய வசதி!

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறைகான பட்ஜெட் தொகையை இன்று நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார்.

Recommended Video

PTR announced the Sports budget and schemes in TN budget 2022 | OneIndia Tamil

நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் இன்று சட்டசபையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் குறித்து அமைச்சர் பிடிஆர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

இதுகுறித்து இன்று சட்ட சபையில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர், உலகின் மிகப்பிரபலமான செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு சர்வதேச அளவில் பல நாடுகள் போட்டிப்போடும். இதுவரை இந்தியாவில் நடத்த வாய்ப்பே கிடைக்காமல் இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு திமுக அரசின் முயற்சிகளின் பலனாக முதல் முறையாக ஒலிம்பியாட் 2022 சென்னையில் நடைபெறுகிறது எனத்தெரிவித்தார். ஒந்த போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

ஒலிம்பிக் பதக்க கனவு

ஒலிம்பிக் பதக்க கனவு

ஒலிம்பிக்கில் தமிழக வீரர், வீராங்கனைகளின் பதக்கங்களை குவிக்க,ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் எனும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத்தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி,பதக்கத்தை குவிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய விளையாட்டு வளாகம்

புதிய விளையாட்டு வளாகம்

பல்வேறு விளையாட்டுக்களுக்குப் புகழ்பெற்ற வட சென்னையில் இளைஞர்கள் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விளையாட்டு வசதிகள் மற்றும் பயிற்சியாளர்களுடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றை அரசு உருவாக்கவுள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் முதற்கட்டமாக ரூ.10 கோடி செலவில் வளாகம் அமைக்கப்படும். இதன் மூலம் இங்கு கைப்பந்து, பூ பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி மற்றும் நவீன உடற்பயிற்சிகள் வழங்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

மொத்த பட்ஜெட் தொகை

மொத்த பட்ஜெட் தொகை

தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் இந்த பட்ஜெட் ஒரு திருப்புமுனையாக இருக்கப்போகிறது. அடுத்து வரும் பல்வேறு போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க இந்த அரசு முழு ஒத்துழைப்பு தரும். இதற்காக விளையாட்டு வீரர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ. 293 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சரி பிடிஆர் தெரிவித்தார்.

Story first published: Friday, March 18, 2022, 12:14 [IST]
Other articles published on Mar 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+