For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 
தமிழக வீரர் பத்ரிநாத் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.. தோனிக்கு தேங்க்ஸ் சொன்னார்!

சென்னை : தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கடந்த வெள்ளிகிழமை, அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தன் ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்கு 38 வயது ஆகிறது.

சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. சென்னை சூப்பர் கிங்ஸில் ஆடியதன் மூலம் தமிழகம் முழுவதும் நன்கு அறிமுகமான வீரர். ஒரு சில சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணியில் ஆடியிருக்கிறார். எனினும், அவருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

Tamilnadu Cricket player Subramaniam Badrinath announces his retirement from all forms of cricket

தமிழக ரஞ்சி அணியில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆடியுள்ளார். அதன் பின் விதர்பா, ஹைதராபாத் அணிகளுக்காகவும் ரஞ்சி தொடரில் ஆடியிருக்கிறார்.

முதல் தர கிரிக்கெட்டில் 145 போட்டிகளில், 10,245 ரன்கள் குவித்து இருக்கிறார். அதில் 32 சதமும் அடங்கும். முதல் தர போட்டிகளில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 54.49. இது நிச்சயம் அதிகம் தான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 100 போட்டிகளுக்கும் மேல் பத்ரிநாத் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளாக வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் ஒளிபரப்பில் வர்ணனையாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். டிஎன்பிஎல் தொடரில் காரைக்குடி காளை அணிக்கு பயிற்சியாளராகவும் தற்போது இருக்கிறார்.

தனது ஓய்வுக்கு பின் உள்ள திட்டங்கள் குறித்து பேசிய பத்ரிநாத், தான் வர்ணனை பணி இருப்பதால், தமிழக அணிக்கு பயிற்சி அளிப்பதை பற்றியெல்லாம் தான் யோசிக்கவில்லை எனவும், குடும்பத்தோடு தன் ஓய்வு நேரத்தை செலவிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகள், 7 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டியில் ஆடி இருக்கிறார் பத்ரிநாத்.

தான் ஒய்வு பெறும் இந்த நேரத்தில் தோனிக்கு தன் நன்றிகளை கூறிக் கொண்டார் பத்ரிநாத். பத்ரிநாத்துக்கு பல வகைகளில் தோனி உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகள் பத்ரிநாத் இடம் பிடித்தார். அதற்கு தோனி அவர் மீது வைத்த நம்பிக்கையும் காரணம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 100 போட்டிகளுக்கும் மேல் பத்ரிநாத் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளாக வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் ஒளிபரப்பில் வர்ணனையாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். டிஎன்பிஎல் தொடரில் காரைக்குடி காளை அணிக்கு பயிற்சியாளராகவும் தற்போது இருக்கிறார்.

Story first published: Saturday, September 1, 2018, 13:26 [IST]
Other articles published on Sep 1, 2018
English summary
Tamilnadu Cricket player Subramaniam Badrinath announces his retirement from all forms of cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+