
தமிழ்நாடு அணியின் சாதனை
தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் - ஜெகதீசன் இருவரும் அடித்த அடியை அருணாச்சல் பிரதேச அணி வீரர்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் பந்தை பறக்கவிட்டனர். அதிலும் ஜெகதீசன் சர்வதேச கிரிக்கெட், முதல்தர கிரிக்கெட் என உலகளவில் பல்வேறு சாதனைகளை படைத்தார். ஒரு பக்கம் சுதர்சன் சதம் விளாசினால், மறுபக்கம் நின்றிருந்த ஜெகதீசன் இரட்டை சதம் விளாசியதோடு, முச்சதத்தை விளாசுவிடுவாரோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்.

மிஸ்ஸான முச்சதம்
ஆனால் ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஜெகதீசன் மீது சர்வதேச கிரிக்கெட்டின் கவனம் குவிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்கள் விளாசிய முதல் அணி என்ற பெருமையையும் தமிழ்நாடு அணி பெற்றது. 50 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்கள் சேர்த்தது.

சுக்குநூறான நம்பிக்கை
இறுதியாக அருணாச்சல் பிரதேசம் அணி 71 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. தமிழ்நாடு அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்டுகளையும், சிலம்பரசன் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் தமிழ்நாடு அணி 435 ரன்கள் என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இமாலய சாதனை படைத்துள்ளது.

சுழலில் சுருண்ட வீரர்கள்
அந்த அணியின் ரோஹன் ஷர்மா 22 பந்துகளில் 2 ரன்களிலும், டோரியா 14 ரன்களிலும் ஆட்டமிழக்க 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அருணாச்சல பிரதேச அணி திணறியது. தொடர்ந்து வந்த கேப்டன் காம்ஷா 17 ரன்களிலும் ஆட்டமிழக்க, மீதமுள்ள வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். அருணாச்சல பிரதேச அணியின் 4 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமலும், மீதமுள்ள வீரர்களில் 3 பேர் ஒற்றை இலக்க ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இமாலய சாதனை
இறுதியாக அருணாச்சல் பிரதேசம் அணி 71 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. தமிழ்நாடு அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்டுகளையும், சிலம்பரசன் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் தமிழ்நாடு அணி 435 ரன்கள் என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இமாலய சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











