For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போச்சா..!! இந்தியா vs தென்னாப்பிரிக்கா - தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் கவலை

சென்சூரியன் : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியனில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா இதுவரை தொடரை வென்றது இல்லை. இதனால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனால் கேப்டன் விராட் கோலி, இந்த தொடரை வென்று தனது பதவியை தக்கவைத்து கொள்ள விரும்புகிறார்.

மிரட்டும் வானிலை

மிரட்டும் வானிலை

சென்சூரியன் மைதானம் எப்போதும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததில்லை. அங்கு விளையாடிய 2 டெஸ்டிலும் இந்தியா தோல்வியே சந்தித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் போட்டி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவை விட தற்போது மழை மிரட்டுகிறது.

முதல் நாள் வானிலை

முதல் நாள் வானிலை

இதனால் சமூக வலைத்தளத்தில் பிரபலமான தமிழ்நாடு வெதர்மேன், தற்போது சென்சூரியன் வானிலை தொடர்பாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முதல் நாள் ஆட்டம் அன்று மழை அவ்வப்போது பெய்யும் என்று தெரிவித்தார். இதனால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் நாள் வானிலை

இரண்டாம் நாள் வானிலை

போட்டியின் இரண்டாவது நாள், அதாவது திங்கட்கிழமை கடும் மழை பொழிவு ஏற்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். இதனால் அன்றைய தினம் ஒரு பந்து கூட வீச முடியாமல் ஆட்டம் கைவிடப்பட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டியின் பெரும்பகுதி மழையால் தடைப்பட உள்ளது.

ஆல் கிளியர்

ஆல் கிளியர்

ஆனால், எஞ்சிய 3 நாட்களிலும் வெயில் அடிக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை இந்தியா பேட்டிங்கில் சொதப்பினால், மழை இந்தியாவை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்தியா சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினால் மழை இந்தியாவின் வெற்றிக்கு ஆப்பு வைக்கவும் வாய்ப்புள்ளது.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகம்

வேகப்பந்துவீச்சுக்கு சாதகம்

ஆடுகளத்தில் புற்கள் ஒரு அளவு இருப்பதால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்தப் போட்டியில் லட்டு சாப்பிடுவது போல் இருக்கும். காரணம் மழை பெய்யும் சூழலில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் அப்போது பந்து நன்காக ஸ்விங் ஆகும். ஆனால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் கைகொடுக்காது. ஒருவேளை ஆடுகளம் தொய்வாக இருந்தால் அப்போது சுழற்பந்துவீச்சாளர்கள் ஜொலிக்க வாய்ப்புள்ளது

Story first published: Monday, December 27, 2021, 0:16 [IST]
Other articles published on Dec 27, 2021
English summary
Tamilnadu weatherman post on India vs SA weather forecastஇந்தியா vs தென்னாப்பிரிக்கா - தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவால் ரசிகர்கள் கவலை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+