Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அவசரப்பட்டுட்டியே குமாரு".. சம்பாதிச்ச பேர் இப்படிலாம் போகணுமா? - சிக்கலில் தமீம் இக்பால்

டாக்கா: இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை சூப்பர் லீக் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக வங்கதேச கேப்டன் தமீம் இக்பாலுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

"வங்கதேச வீரர்களுக்கு என்னதான் ஆச்சு?" என்று கேட்கும் அளவுக்கு வந்துவிட்டது அவர்களின் செயல்பாடுகள். அடுத்தடுத்து பல்பு வாங்குகிறார்கள். சரி.. கோக்குமாக்கான வேலை என்றாலும், அதை கமுக்கமாவும் செய்யத் தெரியவில்லை.

இலங்கைக்கு எதிரான தொடரில், எடக்குமுடக்காக பேசி ஏற்கனவே முஷ்பிகுர் ரஹீம் சிக்க, இப்போது கேப்டன் தமீம் இக்பால் 'நான் என்ன சும்மாவா' என்று சிக்கியிருக்கிறார்.

 ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இலங்கையும், வங்கதேசமும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இதில், 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 48.1 ஓவர்கள் முடிவில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் 125 ரன்களை குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணிக்கு மழையின் காரணமாக 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 40 ஓவர்களில் 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

 தள்ளிவிடு அவன

தள்ளிவிடு அவன

அந்த போட்டியில், இலங்கை அணி பேட்டிங் செய்த போது 11வது ஓவரை வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் வீசினார். அப்போது ஸ்டிரைக்கில் நின்ற குணதிலகா, பந்தை மெஹிதி ஹசனிடம் மெதுவாக தட்டிவிட, மறுமுனையில் நின்றிருந்த பதும் நிஷங்கா, சிங்கிள் எடுக்க கிறீஸை விட்டு வெளியேறினார். பிறகு, பவுலர் பந்தை தடுத்து நிறுத்த பின்வாங்கிவிட்டார். அப்போது வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர், பவுலர் மெஹிதியிடம், " உன் வழியில் குறுக்கே வந்தால், பிடித்து அவனை கீழே தள்ளிவிடு' என ஆக்ரோஷமாக தெரிவித்தார். இவை ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாக, ரசிகர்கள் சமூக தளங்களில் கடுமையாக அவரை விமர்சித்தனர்.

 ஒப்புக் கொண்ட தமீம்

ஒப்புக் கொண்ட தமீம்

இப்போது கேப்டன் தமீம் சிக்கியிருப்பது 3வது ஒருநாள் போட்டியில். இந்த சம்பவம், வங்கதேசம் பேட்டிங் செய்த போது நிகழ்ந்துள்ளது. 10வது ஓவரில் அவர் அவுட்டான போது, அம்பயர் மீதிருந்த கோபத்தில், மோசமான வார்த்தைகளை உபயோகித்தது தெரியவந்தது. இதையடுத்து கள நடுவர்கள் இதுகுறித்த புகாரை எழுப்ப, தமீமும் தான் அப்படி பேசியதை ஒப்புக் கொண்டார். இதனால், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை தேவை இல்லை என்பதால் முடித்துக் கொள்ளப்பட்டது.

 மோஸ்ட் சீனியர்

மோஸ்ட் சீனியர்

எனினும், இதுகுறித்து ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமீம் ஐ.சி.சி நடத்தை விதிகளின் பிரிவு 2.3ஐ மீறியது கண்டறியப்பட்டது, இது "ஒரு சர்வதேச போட்டியின் போது தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது" தொடர்பானது. இது கடந்த 24 மாதங்களில் தமீம் மீதான முதல் குற்றமாகும். ஏற்கனவே முஷ்பிகுர் எதிரணி வீரரை தள்ளிவிட தனது ஜோனியாருக்கு அட்வைஸ் கொடுத்து வாங்கிக் கட்டிய நிலையில், இப்போது மற்றொரு மோஸ்ட் சீனியர் வீரரான தமீம் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அம்பயரை திட்டி சிக்கியிருக்கிறார்.

Story first published: Saturday, May 29, 2021, 20:22 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+