
100வது படம் தன்ஹாஜி
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தன்னுடைய 100வது மற்றும் வரலாற்றுப் படமான தன்ஹாஜியின் விளம்பர பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இன்று இந்த படம் உலகெங்கிலும் வெளியாக உள்ளது.

நிழல் ஜோடியான நிஜ ஜோடி
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக விளங்கிவரும் அஜய் தேவ்கன் மற்றும் கஜோல் இருவரும் இந்த படத்தில் தன்ஹாஜி மாலுசாரே மற்றும் அவரது மனைவி சாவித்ரிபாய் மாலுசாரேவாக நடித்துள்ளனர். சாயிப் அலி கானும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னாள் கேப்டனை சந்தித்த தேவ்கன்
வரலாற்று சிறப்பு வாய்ந்த நிஜ ஹீரோவின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அஜய் தேவ்கன், அதனிடையே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்துள்ளார்.
'இந்தியாவில் மனிதர்களை இணைக்கும் மதம்'
மகேந்திர சிங் தோனியுடன் தான் இணைந்து நின்றுக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அஜய் தேவ்கன், கிரிக்கெட் மற்றும் திரைப்படங்கள் இந்தியாவில் மனிதர்களை இணைக்கும் மதங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்
அஜய் தேவ்கனின் இந்த புகைப்படம் பதிவிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்துள்ளனர். மேலும் அவரது படம் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

அணிக்கு மீண்டும் திரும்ப கோரிக்கை
இந்த புகைப்படத்தின் கீழே கமெண்ட் அளித்திருந்த ரசிகர்கள், தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











