Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்.. தோனியை முந்தினார் ராஸ் டெய்லர்

ஜமைக்கா: 20 ஓவர்கள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியை முந்தினார்.

டெய்லர் தற்போது ஜமைக்கா தல்லாவாஹ் அணிக்காக கரீபியன் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஸ் டெய்லர் 35 பந்துகளில் 51 ரன்களை எடுத்தார். இதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை கடந்தார்.

taylor 18-08-2018

டெய்லர் இதுவரை 248 போட்டிகளில் 271 ரன்களை அடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 267 சிக்ஸர்களை அடித்துள்ளார். மேலும் அவர் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் 12ஆம் இடத்தையும் பிடித்தார்.

ஒட்டுமொத்தமாக 20 ஓவர் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் ஆவார். அவர் இதுவரை 338 போட்டிகளில் 867 சிக்சர்களை அடித்து யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்ட் 537 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இந்திய வீரர்களில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 313 சிக்சர்களை அடித்துள்ளார்.

Story first published: Saturday, August 18, 2018, 11:43 [IST]
Other articles published on Aug 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+