Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணிக்கு ஆதரவாக அஸ்வின், ரெய்னா.. 'செத்துப் போவேன்'.. அஸ்வின் ஆவேசப் பேட்டி!

மிர்பூர்: கேப்டன் டோணிக்கு எதிராக கோஹ்லி தரப்பு குமுறி வருவதாகவும், போர்க்கொடி உயர்த்தியுள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில் டோணிக்கு ஆதரவாக சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், சுரேஷ் ரெய்னா ஆகியோர் பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளனர். இதன் மூலம் அணிக்குள் அடிதடி நடப்பது உறுதியாகியுள்ளது.

இருவருமே டோணிக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். அவருக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் கோஷ்டிப் பூசல் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

டோணி சொன்னால் செத்துப் போவேன் என்று அஸ்வின் உணர்ச்சிகரமாக கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிர்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது அஸ்வின் பேசுகையில் இவ்வாறு கூறினார். அவரது பேச்சிலிருந்து...

தலைவருக்கு பின்னால் இல்லாமல் வேறு என்ன செய்ய முடியும்?

தலைவருக்கு பின்னால் இல்லாமல் வேறு என்ன செய்ய முடியும்?

உங்களது தலைவருக்குப் பின்னால் இருக்க வேண்டியது உங்களது கடமை. அதை விட வேறு என்ன செய்ய முடியும். என்னைப் பொறுத்தவரை நான் கேப்டனுக்குக் கட்டுப்பட்டவன். டோணிக்குப் பின்னால் இருக்க வேண்டியது எனது கடமை.

செத்துப் போவேன்

செத்துப் போவேன்

என்னைப் பார்த்து மைதானத்திலேயே செத்துப் போ என்று எனது கேப்டன் கூறினால் நான் நிச்சயம் செய்வேன். கேப்டனுக்குக் கட்டுப்பட வேண்டியது வீரர்களின் கடமை.

தலைவருக்குப் பின்னால் இல்லாவிட்டால்

தலைவருக்குப் பின்னால் இல்லாவிட்டால்

இது ஒரு ராணுவம் மாதிரி. கேப்டனுக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லாமல் முந்திக் கொண்டு போனால் சுட்டு வீழ்த்தப்படுவோம்.

யாராக இருந்தாலும் சரி

யாராக இருந்தாலும் சரி

இப்போது என்றில்லை, எப்போதுமே கேப்டனுக்குக் கட்டுப்பட்டவன்தான் நான். கேப்டன் மைதானத்தில் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் நல்ல வீரர்களுக்கு அழகு.

மாபெரும் வீரர் டோணி

மாபெரும் வீரர் டோணி

டோணி மாபெரும் வீரர். மிகச் சிறந்த கிரிக்கெட்டர். நாட்டுக்காக நிறைய செய்துள்ளார். அவர் செய்ததை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது.

மோசமான ரிசல்ட் வந்தா என்ன

மோசமான ரிசல்ட் வந்தா என்ன

எல்லாப் போட்டிகளிலும் வெல்ல முடியாது. மோசமான ரிசல்ட்களும் வரத்தான் செய்யும். அது கஷ்டம்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஒரு அணியாக தவறு செய்யும்போது கேப்டனை மட்டும் குற்றம் சாட்டக் கூடாது.

அணி தவறு செய்தால் அவர் என்ன செய்வார்

அணி தவறு செய்தால் அவர் என்ன செய்வார்

அணி தவறு செய்துள்ளது. ஆனால் டோணி அணிக்கு நிறைய நல்லது செய்துள்ளார். அதைப் பார்க்க வேண்டும். அணியின் தவறுக்கு அவரைப் பொறுப்பாக்கக் கூடாது.

நியாயமே இல்லை

நியாயமே இல்லை

அப்படி அவரை மட்டும் குற்றம் சாட்டினால் அது நியாயமற்றது. மொத்தமாக நாங்கள் இந்தத் தொடரில் தோற்று விட்டோம். ஒரு குழுவாக தோல்வி அடைந்து விட்டோம். குழுவாக வெல்ல வேண்டும். தவறுகளைக் களைந்து அடுத்த போட்டியில் சிறப்பாக ஆட முயற்சிக்க வேண்டும்.

டிரஸ்ஸிங் ரூமில் ஒரு பிரச்சினையும் இல்லை

டிரஸ்ஸிங் ரூமில் ஒரு பிரச்சினையும் இல்லை

இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எப்போதும் போலத்தான் உள்ளது. நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அது எங்களுக்குள் புகைச்சலை ஏற்படுத்தவில்லை என்றார் அஸ்வின்.

ரெய்னாவும் ஆதரவு

ரெய்னாவும் ஆதரவு

இதேபோல சுரேஷ் ரெய்னாவும் டோணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு டோணியை மட்டும் குற்றம் சாட்டிப் பேசக் கூடாது என்று ரெய்னாவும் கூறியுள்ளார்.

டிவிட்டரில்

தனது டிவிட்டர் பக்கத்தில் டோணியின் படத்தைப் போட்டு ரெஸ்பெக்ட் என்று கருத்து தெரிவித்துள்ளார் ரெய்னா. அஸ்வினைப் போலவே ரெய்னாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Wednesday, June 24, 2015, 19:56 [IST]
Other articles published on Jun 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+