Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உருக்கமான சம்பவம்.. கறுப்பு பட்டை.. இங்கிலாந்து அணியின் சோகத்திற்கு பின்னால் இப்படி ஒரு மனிதரா?

சென்னை: சேப்பாக் மைதானத்தில் இன்று (பிப்.5) தொடங்கிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது. கேப்டன் ஜோ ரூட் ஜோராக சதம் அடிக்க, சிப்ளே 'இதோ வந்துட்டேன்' என்று அவரும் சதத்தை நெருங்க, இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்களை தாண்டி கேஷுவல் வாக் போட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து இன்று சிறப்பாக தனது ஆட்டத்தை துவக்கியிருப்பதற்கு ஒருவேளை இந்த நபர் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆம்! டாம் மூர் எனும் 100 வயது இளைஞனுக்காக இங்கிலாந்தே சோகத்தில் உள்ளது.

 டாம் மூர் எனும் போராளி

டாம் மூர் எனும் போராளி

2020ல் கொரோனா பரவல் உலகம் முழுவதையும் உச்சக்கட்ட பயத்திலும், பதட்டத்தில் வைத்திருக்க, களத்தில் போராடிய மருத்துவ வீரர்களுக்காக நிதி திரட்ட தீர்மானித்தார் முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி கேப்டன் டாம் மூர்.

 நூறு சுற்று நடை

நூறு சுற்று நடை

இதற்காக தனது 100வது பிறந்தநாளுக்குள் 1,000 பவுண்ட் நிதி திரட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது வீட்டு தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்க முடிவு செய்தார். மக்கள் மத்தியில் இவரது முயற்சி பிரபலமாக 39 மில்லியன் பவுண்ட் குவிந்தது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 387 கோடி ரூபாய்.

 இங்கிலாந்தின் செல்லப்பிள்ளை

இங்கிலாந்தின் செல்லப்பிள்ளை

தனது அசாத்திய முயற்சியின் காரணமாக ஒவ்வொரு இங்கிலாந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரது 'Tomorrow will be a good day' சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. தனது 100வது பிறந்தநாளை உலகமே மறக்க முடியாத நிகழ்வாக மாற்றினார்.

 சோகத்தில் இங்கிலாந்து

சோகத்தில் இங்கிலாந்து

ஏற்கெனவே கேன்சர் உள்பட பல நோய்களால் அவதிப்பட்ட கேப்டன் மூர், கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு தடுப்பூசியும் போட முடியவில்லை. இதனால், மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட கேப்டன் டாம் மூர், இரண்டு நாட்களுக்கு முன்னர் பிப்.2 அன்று உயிரிழந்தார்.

 கறுப்பு பட்டையுடன் இங்கிலாந்து

கறுப்பு பட்டையுடன் இங்கிலாந்து

இதன் காரணமாகவே, இந்தியாவுக்கு எதிரான இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது, இங்கிலாந்து வீரர்கள் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

Story first published: Friday, February 5, 2021, 18:07 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+