Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானே தலைமையில இந்திய அணி வீரர்கள் சிறப்பா இருக்காங்க... திலிப் வெங்சர்க்கார் மகிழ்ச்சி

டெல்லி : தற்போதைய கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முன்னாள் இந்திய வீரர் திலிப் வெங்சர்க்கார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்வதற்கு இந்திய வீரர்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் ரிஷப் பந்த் இன்னும் சிறிது நேரம் பேட்டிங் செய்திருந்தால் சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி அடைந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

போட்டி டிரா

போட்டி டிரா

கடந்த 7ம் தேதி துவங்கிய சிட்னி டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் போட்டியை டிரா செய்துள்ளன. இரண்டாவது இன்னிங்சில 407 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடிய நிலையில், ரிஷப் பந்த், புஜாரா, அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி இணைந்து போட்டியை டிரா செய்ய இந்திய அணிக்கு உதவினர்.

முயற்சி சிறப்பானது

முயற்சி சிறப்பானது

இந்நிலையில் நேற்று நிறைவடைந்த இந்த 3வது டெஸ்ட் போட்டியை தான் மிகவும் ரசித்து பார்த்ததாகவும் இந்த போட்டியை டிரா செய்ய இந்திய வீரர்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சி சிறப்பானது என்றும் முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் துணிச்சல் முயற்சி

இந்திய அணியின் துணிச்சல் முயற்சி

4வது நாள் ஆட்டத்தின்போதே 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 5வது நாளில் சிறப்பான மற்றும் துணிச்சலான முயற்சியை இந்தியா மேற்கொள்ளும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் வெங்சர்க்கார் கூறியுள்ளார். காயங்களுடன் ஹனுமா விஹாரி மற்றும் புஜாரா ஆகியோர் சிறப்பாக விளையாடியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பந்த் சிறப்பு

பந்த் சிறப்பு

ரிஷப் பந்த் மிகவும் சிறப்பாக இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றதாகவும் அவர் இன்னும் சிறிது நேரம் விளையாடியிருந்தால் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் கூறினார். ஆயினும் இந்த டிரா, வெற்றிக்கு சிறிதும் குறைந்ததில்லை என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

Story first published: Tuesday, January 12, 2021, 18:42 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+