கோலியின் 100வது டெஸ்ட்டில் திடீர் மாற்றம்.. பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. அதுவும் பெங்களூருவில்!!
மும்பை: இந்திய அணி விளையாடப்போகும் அடுத்த முக்கிய டெஸ்ட் போட்டி குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக தயாராகி வரும் இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் மோதவுள்ளது.
இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

பிசிசிஐ அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல்களால் இலங்கை தொடருக்கான இடங்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான விவரம் மட்டும் ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போட்டி மட்டும் பகலிரவு "பிங்க் பால்" டெஸ்ட்டாக நடைபெறவுள்ளது.

என்ன காரணம்
இந்த அறிவிப்புக்கு பின்னால் உள்ள காரணம், இது விராட் கோலி விளையாடப்போகும் 100வது டெஸ்ட் போட்டியாகும். வழக்கமாக டெஸ்ட் போட்டிகள் மாலை நேரத்தில் முடிந்துவிடும். இந்த டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதால் கோலிக்கு வழங்கப்படும் கவுரவம் மற்றும் அவரின் ஸ்பெஷல் இன்னிங்ஸை பலரால் கண்டுகளிக்க முடியாது. எனவே பகலிரவு டெஸ்ட் என்றால் அதிக ரசிகர்கள் காண்பார்கள் என்பதால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விராட் கோலிக்கான வாய்ப்பு
விராட் கோலி கடந்த 2019ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்து வருகிறார். அவரின் சதத்திற்கான காத்திருப்பும் 100வது டெஸ்டிலாவது நிறைவேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதுவும் கோலிக்கு மிகவும் பிடித்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

டெஸ்ட் வரலாறு
இந்தியாவில் நடைபெறவுள்ள 3வது பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். கடந்த 2019ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக கொல்கத்தாவில் மோதியது. இதன் பின்னர் 2021ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த முறை புதிய கேப்டனின் தலைமையில் இந்திய அணி 3வது பிங்க் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications