Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல்.. 11 அணிகளை முந்தி முதலிடத்தில் இந்தியா.. சுவாரஸ்ய சாதனையும் உண்டு

மெல்போர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மட்டுமே தற்போது அனைத்து அணிகளை விடவும் டாப்பில் உள்ளது.

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் 10 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.

12 அணிகள் பங்கேற்றுள்ள சூப்பர் 12 லீக் சுற்று போட்டிகளும் தற்போது இறுதிகட்டத்தை எட்டி வருகின்றன.

டி20 உலகக்கோப்பை போட்டிகள்

டி20 உலகக்கோப்பை போட்டிகள்

இந்த லீக் சுற்றின் ஏ குரூப்பில் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. இதில் இருந்து எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்த்திருக்கும் சூழலில் தான் மழை சொதப்பி வருகிறது.

முக்கிய போட்டிகள் ரத்து

முக்கிய போட்டிகள் ரத்து

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் முக்கிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விடுகின்றன. இதற்கு காரணம் மழை தான். இதுவரை நடைபெற்றுள்ள 14 போட்டிகளில் 4 போட்டிகள் மழையினால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதிலும் முன்னணி அணியான இங்கிலாந்து அயர்லாந்திடம் தோல்வியை தழுவியது.

டாப்பில் இந்தியா

டாப்பில் இந்தியா

இந்நிலையில் இந்த போட்டியில் தற்போதைக்கு மழை மற்றும் இந்திய அணி மட்டுமே வெற்றியாளர்களாக உள்ளனர். அதாவது இரு குரூப்களின் புள்ளிப்பட்டியலையும் சேர்த்து பார்த்தால் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்தியா மட்டுமே உள்ளது. இதுவரை 2 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மழை 4 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை இருக்கும் என முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மெல்பேர்ன் நகரத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகம் எனக்கூறப்பட்டது. ஆனால் அதனை எதையுமே கண்டுக்கொள்ளாத ஐசிசி, போட்டி நடைபெறும் பகுதிகளை கூட மாற்றி அமைக்காமல் திட்டத்தின் படி சென்றது. இதனால் பல்வேறு போட்டிகளில் சரியான முடிவு எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Story first published: Friday, October 28, 2022, 17:52 [IST]
Other articles published on Oct 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+