Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக், ஷமி நடத்திய வேட்டை.. விழிப்பிதுங்கி நின்ற நியூசி, வீரர்கள்.. 2வது ODIல் இந்தியா அபார வெற்றி

ராய்பூர்: நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகியோர் நடத்திய வேட்டையால் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இரு அணிகளும் மோதிய இந்த போட்டி ராய்பூரில் உள்ள சாஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல்முறையாக இந்த மைதானத்தில் சர்வதேச போட்டி நடைபெறுவதால் யாருக்கும் அதன் தன்மை குறித்து சரிவர தெரியவில்லை. ஆனால் பிட்ச்-ல் ஏகபோகத்திற்கு ஸ்விங் இருந்தது.

ஓப்பனிங்கே ஷாக்

ஓப்பனிங்கே ஷாக்

முகமது ஷமி வீசிய பந்தில் நியூசிலாந்து அணியின் ஓப்பனிங் வீரர் ஃபின் ஆலன் ஒரு ரன்னை கூட எடுக்காமல் அவுட்டானார். மற்றொரு ஓப்பனரான டெவோன் கான்வே 7 ரன்களுக்கு வெளியேறினார். அதிரடியாக பவுண்டரி அடித்த அவரை டைவ் அடித்து கேட்ச் பிடித்ததன் மூலம் வெளியேற்றினார். இதன் பின்னர் ஒரு இடத்தில் கூட அந்த அணியால் மீண்டு வர முடியவில்லை.

 சரிந்த மிடில் ஆர்டர்

சரிந்த மிடில் ஆர்டர்

நட்சத்திர வீரர்களான ஹென்றி நிகோலஸ் (2), டேரில் மிட்செல் (1) , டாம் லேதம் (1) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 15 ரன்களுக்கெல்லாம் அந்த அணி 5 விக்கெட்களை இழந்துவிட்டது. கடந்த போட்டியில் அந்த அணியை காப்பாற்றிய மைக்கேல் பிரேஸ்வெல் 22 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கெல்லாம் நியூசிலாந்து அணி சுருண்டது.

இந்திய இன்னிங்ஸ்

இந்திய இன்னிங்ஸ்

மிகவும் குறைவான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி எந்தவித பதற்றமும் இன்றி சிறப்பான ஓப்பனிங்கை பெற்றது. தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா 50 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இதன் பின்னர் வந்த விராட் கோலி 11 ரன்களை எடுக்க, மறுபுறம் சுப்மன் கில் 53 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இதனால் 20.1 ஓவர்களிலெல்லாம் 2 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்களை எடுத்து வெற்றி கண்டது.

தொடர் வெற்றிகள்

தொடர் வெற்றிகள்

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்களும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்த போட்டி இந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, January 21, 2023, 19:17 [IST]
Other articles published on Jan 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+