For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அடேங்கப்பா..” பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய இந்தியா.. ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை.. முழு விவரம்

ட்ரினிடாட்: சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வைத்திருந்த ஒரு பெருமையை தகர்த்து இந்திய அணி உலக சாதனை படைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 2 வெற்றிகளை பெற்று கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியின் வெற்றி

இந்திய அணியின் வெற்றி

இப்போட்டியில் 311 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தோற்றுவிடும் என அனைவரும் நினைத்தனர். அதற்கேற்றார் போலவே 205 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும் கடைசி நேரத்தில் அக்‌ஷர் பட்டேல் 35 பந்துகளில் 64 ரன்களை அடித்து வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

புதிய உலக சாதனை

புதிய உலக சாதனை

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி உலக சாதனையை படைத்துள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது. இது அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக பெற்ற 12வது வெற்றியாகும்.

பாகிஸ்தான் ரெக்கார்ட்

பாகிஸ்தான் ரெக்கார்ட்

இதற்கு முன்பு வரை பாகிஸ்தான் அணி, ஜிம்பாவேவுக்கு எதிராக 11 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றிருந்தது தான் சாதனையாக இருந்தது. தற்போது பாகிஸ்தானை முந்தி இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய அணிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

டி20-லும் ஆதிக்கம்

டி20-லும் ஆதிக்கம்

50 ஓவர்கள் கிரிக்கெட் மட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளின் பட்டியலில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ச்சியாக 12 வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது. இதே போல ரோமானியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் 12 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கின்றன.

Story first published: Monday, July 25, 2022, 16:36 [IST]
Other articles published on Jul 25, 2022
English summary
Team India's World record in ODI Cricket ( இந்திய அணி சாதனை ) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+