Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தரமான கம்பேக் தந்த ஆவேஷ் கான்.. 4வது டி20ல் மோசமாக அவுட்டான வெஸ்ட் இண்டீஸ்.. இந்திய அணி அபார வெற்றி!

ஃப்ளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இரு அணிகளும் மோதிய இந்த போட்டி நேற்று இரவு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

அதிரடி ஓப்பனிங்

அதிரடி ஓப்பனிங்

இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா - சூர்யகுமார் யாதவ் சிறப்பான அடிதளத்தை அமைத்தனர். ரோகித் சர்மா 16 பந்துகளில் 33 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 24 ரன்களும் அடித்தனர். இதன் பின்னர் வந்த தீபக் ஹூடா 21 ரன்களுக்கு நடையை கட்ட 108 ரன்களுக்கு 3 விக்கெட்கள் சரிந்தன.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடி காட்டினர். ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 44 ரன்களும், சாம்சன் 23 பந்துகளில் 30 ரன்களையும் குவித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது.

திணறிய வெஸ்ட் இண்டீஸ்

திணறிய வெஸ்ட் இண்டீஸ்

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள், இந்திய பவுலிங்கை எதிர்கொள்ள திணறினர். தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (13), கெயில் மெயர்ஸ் (14) என அடுத்தடுத்து வெளியேற பின்னர் வந்த டெவோன் தாமஸ் (1), நிகோலஸ் பூரண் (24), ரோவ்மென் போவெல் (24) என சொதப்பினர். மற்ற வீரர்களும் சொதப்ப 19.1 ஓவர்களில் அந்த அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 கம்பேக் கொடுத்த ஆவேஷ்

கம்பேக் கொடுத்த ஆவேஷ்

இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடந்த 2 போட்டிகளாக கடும் விமர்சனங்களுக்கு உள்ள வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் இப்போட்டியில் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

Story first published: Sunday, August 7, 2022, 16:17 [IST]
Other articles published on Aug 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+