Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வீக்னஸ மறந்துட்டாங்களே”.. இந்திய பவுலர்கள் செய்த சிறு தவறு.. 2வது டெஸ்டின் தோல்விக்கான காரணம்

ஜோகசன்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் கவனிக்க தவறிய ஒரு விஷயம் தான் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

இரு அணிகளும் மோதிய இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரும் 1 - 1 என சமநிலையானது.

இப்போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிடலாம் என்றிருந்த இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தோல்விக்கான காரணம் என்ன

தோல்விக்கான காரணம் என்ன

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 266 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட் எடுத்த இந்திய பவுலர்கள், 2வது இன்னிங்ஸில் அதனை செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் அவர் வீச மறந்த பவுலிங் லெந்த் என்று கூறலாம். வாண்டரர்ஸ் களத்தில் வேகப்பந்துவீச்சுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதுவும் எனவே அங்கு பல்வேறு வித்தியாசங்களை பவுலிங்கில் காட்டிருக்க வேண்டும்.

 பவுலர்களின் சிறு தவறு

பவுலர்களின் சிறு தவறு

அதாவது 2வது இன்னிங்ஸின் போது இந்திய அணி 240 என்ற குறைந்த இலக்கை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. எனவே இதற்கு அவுட் சைட் ஆஃப் திசையில் பந்துவீசினால் தான் ரன்களை கட்டுப்படுத்தவும் முடியும், விக்கெட் எடுக்கவும் முடியும். ஆனால் இந்திய பவுலர்கள் அதிகப்படியான பந்துகளை ஸ்டம்பிற்கு நேராகவே வீசினர்.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

பிட்ச்-ல் நல்ல ஈரப்பதம் இருந்ததால் நல்ல ஸ்விங்கும் இருக்கும். இந்திய பவுலர்கள் ஆஃப் சைட் திசையில் பவுலிங் வீசியிருந்தால், பந்து வெளியே செல்கிறதா?, உள்ளே வருகிறதா? என்பது தெரியாமல், பேட்ஸ்மேன் அடிக்காமல் விட்டுவிடுவார். அப்படி விடும் ஏதேனும் பந்து உள்ளே ஸ்டம்பில் படலாம். இல்லையென்றால் எட்ஜாகி கேட்ச் ஆகலாம். ஆனால் இதனை யோசிக்காத பும்ரா, ஷமி ஆகியோர் நேராக ஸ்டம்ப் லைனிலேயே பவுலிங் வீசினர்.

Recommended Video

IND vs SA India தோல்விக்கு இதுவே காரணம் –KL Rahul வருத்தம் | Oneindia Tamil
டிராவிட் மீதே அதிருப்தி

டிராவிட் மீதே அதிருப்தி

நேராக பந்து வருவதை உணர்ந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிதானமாக பவுண்டரிகளுக்கு ரூட் போட்டு அனுப்பி வைத்தனர். இதனால் தான் மிக வேகமாக ரன் ரேட் அதிகரித்ததுக்கும் காரணம். ஒருவேளை இந்த சூழலில் முகமது சிராஜ் இருந்திருந்தால் இந்திய அணிக்கு உதவி இருக்கலாம். ஏனென்றால் சிராஜின் பலமே பந்தை டேர்ன் செய்வது தான். இதனால் இந்த விவரத்தை ராகுல் டிராவிட் வீரர்களுக்கு தெரியபடுத்தியிருக்கலாம் என ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.

Story first published: Friday, January 7, 2022, 15:26 [IST]
Other articles published on Jan 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+