Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி வீரர் நீக்கம்.. 2வது டெஸ்டில் தொடக்கமே பின்னடைவு.. இந்திய அணி பவுலிங்.. ப்ளேயிங் 11 இதோ!

டெல்லி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முக்கியமான மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. பிட்ச்-ன் தன்மையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நற்செய்தியும் கொடுக்கப்பட்டுள்ளாது.

இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே 1 - 0 என முன்னிலை வகிக்கும் சூழலில் பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா முணைப்புடன் வந்துள்ளது.

இதில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பிட்ச்-ன் நிலைமையை பார்த்து அவரே நல்ல டெஸ்ட் போட்டியாக இது அமைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

அதாவது டெல்லி மைதான பிட்ச்-ன் மைய பகுதிகளில் நன்கு பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. ஆனால் பிட்ச்-ன் இரு முனைகளிலும் அதிக வெடிப்புகள் உள்ளதாக தெரிகிறது. இவை நேரம் போக போக பெரிதாகி வரண்டுவிடும். எனவே முதல் 2 நாட்களுக்கு பேட்ஸ்மேன்கள் இந்த பிட்ச்-ஐ நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்பிறகு பொறுமையாக ஆட வேண்டியது அவசியம்.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போதும் மிடில் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. ஓப்பனிங்கில் ரோகித் சர்மா மற்றும் லோயர் ஆர்டரில் அக்‌ஷர் பட்டேல், ஜடேஜா ஆகியோரே இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினர். இதனை சரிசெய்யும் விதமாக இந்த முறை மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். முதுகு வலி பிரச்சினையால் விலகியிருந்த அவர், முழு ஃபிட்னஸுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதிரடி வீரர் நீக்கம்

அதிரடி வீரர் நீக்கம்

ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் வழி விட்டுள்ளார். முதல் டெஸ்டில் அறிமுகமான சூர்யகுமார் வெறும் 8 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார். எனவே அவர் இன்னும் சிறிது நாட்கள் வெளியில் அமர வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளனர்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

முதல் 2 நாட்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்தவரை தாக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். இதனால் முகமது சிராஜ், முகமது ஷமி ஆகிய இருவரும் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்

Story first published: Friday, February 17, 2023, 9:31 [IST]
Other articles published on Feb 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+