
எப்படி
இந்த போட்டியில் இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின் என்று இரண்டு ஸ்பின்
பவுலர்கள். சிட்னி பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு எதுவாக இருக்கும் என்பதால்
இவர்கள் இருவரும் நன்றாக பவுலிங் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல்
விஹாரிக்கு பவுலிங் வழங்கப்பட்டால் அவரும் விக்கெட் எடுக்க வாய்ப்புள்ளது.

ஆனால்
ஆனால் அணியின் ஸ்பீட் பவுலிங் ஆர்டர் மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது.
இந்திய அணியில் இருக்கும் பவுலர்களில் பும்ரா மட்டும் கொஞ்சம் நம்பிக்கை
அளிக்கிறார். சிராஜ் கடந்த போட்டியில் நன்றாக விக்கெட் எடுத்தார். ஆனாலும்
அவரின் பார்ம் தொடருமா, முதல் தர போட்டிகளில் ஆடுவது போல ஆடுவாரா என்று
கேள்வி எழுந்துள்ளது.

மோசம்
இன்னொரு பக்கம் சைனி பவுலிங் செய்யும் விதம் கேள்வியாக உள்ளது. ஒருநாள்
போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை. வலைப்பயிற்சியிலும் இவர் சரியாக
ஆடவில்லை . இந்த நிலையில் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

முக்கியம்
இந்திய அணியின் முக்கியமான பவுலர்கள் எல்லோரும் காயம் அடைந்துள்ள நிலையில்
இந்திய அணியின் பவுலிங் இவ்வளவு வலிமை இழந்துள்ளது. சமி, இஷாந்த், உமேஷ்,
புவனேஷ்வர் குமார் இல்லாததால் அனுபவம் இல்லாத வீரர்களை வைத்து இந்தியா
விளையாட வேண்டி உள்ளது. அனுபவம் இல்லாத இவர்கள் வார்னர் போன்ற வீரர்களை
எப்படி சமாளிப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

பவுலர்கள்
இதில் சிராஜ் , சைனி இரண்டு பேருமே ஆர்சிபி அணியின் பவுலர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. இதனால் பவுலிங்கில் இந்திய அணியும் ஆர்சிபி அணி போல
மோசமாக சொதப்புமோ என்று கேள்வி எழுந்துள்ளது. அடுத்த போட்டி மிகவும்
முக்கியம் என்பதால் இந்திய பவுலர்கள் நன்றாக பந்து வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











