அடுத்தடுத்து சரிந்த விக்கெட்.. 4வது டெஸ்டில் இந்திய பவுலிங் ஆதிக்கம்.. ஆஸி. பேட்ஸ்மேன்கள் திணறல்
சிட்னி: நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.
ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவும், டி 20 தொடரில் இந்தியாவும் வென்ற நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெல்ல மூன்றாவது டெஸ்ட் டிரா ஆனது.

நான்காவது
இந்த நிலையில் நான்காவது டெஸ்டில் வெல்லும் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டிக்கு முன்பாக பல இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் மீதம் இருக்கும் வீரர்களை வைத்து புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது.

காயம்
காயம் காரணமாக இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா, விஹாரி, அஸ்வின் ஆகியோர் இடம்பெறவில்லை. பும்ரா, அஸ்வின் இரண்டும் பேரும் லேசான காயத்தோடு உள்ளனர். ஆனால் இவர்கள் இன்று ஆடினால் அவர்களின் காயம் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்று இவர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

வாய்ப்பு
இதனால் இன்று இந்திய அணியில் 4 ஸ்பீட் பவுலர்கள், ஒரு ஸ்பின் பவுலர்கள் களமிறங்கினார்கள்.இந்திய அணியில் இன்று மயங்க் அகர்வால், நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

விறுவிறுப்பு
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, ரஹானே, பண்ட், ஷரத்துல் தாக்கூர், நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர், சைனி, சிராஜ் ஆகியோர் இன்று இந்திய அணிக்காக களமிறங்குகிறார்.

எப்படி
இன்றைய ஆட்டத்தில் இதுவரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை இழந்துள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வார்னர் சிராஜ் ஓவரில் அவுட் ஆனார். அதேபோல் மார்கஸ் ஹாரிஸ் தாக்கூர் ஓவரில் அவுட் ஆனார்.ஆஸ்திரேலிய அணி தற்போது 2 விக்கெட்டை இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 30, மார்னஸ் 19 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications