Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

26 ஆண்டுக்கு முன் வந்த அதே நிலைமை.. மோசமான சாதனையை படைக்கும் இந்தியா??.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மிக மோசமான சாதனையை படைக்கும் நிலைக்கு இந்திய அணி சென்றுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் 2 போட்டிகளிலும் தோற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்தியாவின் தோல்வி

இந்தியாவின் தோல்வி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பெற்றிருந்த இந்தியா, 13வது வெற்றி பெற்று உலக சாதனை படைக்கவிருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. ரிஷப் பண்ட்-ன் தலைமையிலான இந்திய அணி அந்த வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் மிக மோசமான சாதனையை படைப்பதற்கான வாய்ப்பும் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

புது சாதனை ரெடி

புது சாதனை ரெடி

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக அதிக தோல்விகளை பெற்றது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தான். 1998 - 2000 காலக்கட்டத்தில் 10 தோல்விகளை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 1995 - 1996ம் ஆண்டு காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 7 தோல்விகளை பெற்றிருந்ததே மோசமான ரெக்கார்டாக இருந்தது.

சாதனைக்கு வாய்ப்பு

சாதனைக்கு வாய்ப்பு

தற்போது அதனை உடைக்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 7 தோல்விகளை பெற்றுவிட்டது. இன்று நடைபெறும் 3வது டி20 போட்டியிலும் தோல்வியடைந்துவிட்டால், அந்த மோசமான சாதனையை படைக்கும்.

Recommended Video

IND vs SA 3rd T20-யின் Predicted Playing 11 என்ன? Aanee's Appeal | *Cricket | OneIndia Tamil
மாற்றங்கள் என்ன

மாற்றங்கள் என்ன

இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி இன்று இரவு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த பிட்ச்-ல் பவுலர்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என்பதால், குறைந்த ஸ்கோர் போட்டியாக தான் அமையும். எனவே அதற்கான மாற்றத்துடன் இந்திய அணி களமிறங்க வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, June 14, 2022, 12:12 [IST]
Other articles published on Jun 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+