Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்ட்யாவின் 2023 Resolution.. கேட்டு பெருமைப்பட்ட ரசிகர்கள்.. டெஸ்ட் போட்டி ஆடவும் திட்டம்

மும்பை: இலங்கை அணியுடனான டி20 கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார். அதில் 2023ம் ஆண்டில் இந்திய அணியின் திட்டம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இதில் முதல் டி20 போட்டி நாளை மாலை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது.

2023ம் ஆண்டின் முதல் போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் வெற்றி பெறுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி ரோகித், விராட் கோலி, கே.எல்.ராகுல் என சீனியர் வீரர்கள் இன்றி களமிறங்குகிறது.

 ஹர்திக் பாண்ட்யா பேச்சு

ஹர்திக் பாண்ட்யா பேச்சு

இந்நிலையில் 2023ம் ஆண்டில் இந்திய அணி எப்படி செயல்பட போகிறது என்பது குறித்து ஹர்திக் பாண்ட்யா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அதில், 2023ம் ஆண்டில் நான் எடுத்துக்கொள்ளும் தீர்மானம் என்னவென்றால் இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வென்றுக்கொடுக்க வேண்டும். 2022ல் துரதிஷ்டவசமாக எங்களால் அதை செய்ய முடியவில்லை. ஆனால் இந்தாண்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு, அதனை அடைவோம்.

ஸ்பெஷல் ஆண்டு

ஸ்பெஷல் ஆண்டு

தொடர்ந்து தனது ஃபார்ம் குறித்து பேசிய அவர், எனது பவுலிங் சிறப்பாகவே உள்ளது என நினைக்கிறேன், கடின உழைப்பு மட்டுமே பலனை கொடுக்கும். 2022ம் ஆண்டு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. உலகக்கோப்பையை தவறவிடுவது விளையாட்டில் ஜகமான ஒன்று. ஏனென்றால் காயங்களை யாராலும் தடுக்க முடியாது. எனினும் இந்தாண்டு இந்தியா பல தொடர்களை வெல்ல நான் உறுதுணையாக இருப்பேன் எனக்கூறினார்.

டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் காணலாமா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், டி20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் முதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முழுமையான செயல்பாட்டை கொடுத்துவிட்ட பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு செல்வது குறித்து முடிவெடுப்பேன் எனக்கூறினார்.

அட்டகாச கம்பேக்

அட்டகாச கம்பேக்

2022ம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு மிகச்சிறந்த கம்பேக்காக இருந்தது. ஃபார்ம் அவுட்டாகி திணறி வந்த அவர், ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வழிநடத்தி கோப்பை வென்றுக்கொடுத்தார். இதன் பின்னர் ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். மேலும் அவருக்கு இந்திய டி20 அணியை வழிநடத்தும் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 2, 2023, 18:42 [IST]
Other articles published on Jan 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+