Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்றிலேயே முதல் முறை.. ஹர்திக் பாண்ட்யா பிரமாண்ட சாதனை.. அதுவும் முதல் போட்டியிலேயே!!

டப்ளின்: கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியிலேயே ஹர்திக் பாண்ட்யா பெரும் சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

கெத்து காட்டிய பாண்ட்யா

கெத்து காட்டிய பாண்ட்யா

இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியே பாண்ட்யாவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. டாஸ் அவருக்கு சாதகமாக சென்றது. இதே போல பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தினார். பேட்டிங்கில் 12 பந்துகளில் 24 ரன்களும் மற்றும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

பெரும் சாதனை

பெரும் சாதனை

இந்நிலையில் இதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தும் 8வது கேப்டன் பாண்ட்யாவாகும். ஆனால் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார்.

2வது ஓவரில் விக்கெட்

2வது ஓவரில் விக்கெட்

12 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக 2வது ஓவரிலேயே கேப்டன் பாண்ட்யா பந்துவீச வந்துவிட்டார். அந்த ஓவரில் நெதர்லாந்து ஓப்பனர் பால் ஸ்டிர்லிங்கை விக்கெட் எடுத்தார். 2வது போட்டியில் வெற்றி பெற்றுக்கொடுத்தால், தனது அறிமுக தொடரையே வென்றுக்கொடுத்த பெருமையை பெறுவார்.

பாண்ட்யா கருத்து

பாண்ட்யா கருத்து

வெற்றி பெற்றது குறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா, ஒரு தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. சிறப்பான முறையில் நாங்கள் வென்றுவிட்டோம். இதனை தொடருவோம் என கூறினார். இரு அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி நாளை நடைபெறவிருக்கிறது.

Story first published: Monday, June 27, 2022, 14:19 [IST]
Other articles published on Jun 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+