
வீரர்கள்
இந்த நிலையில் இந்திய அணியில் முக்கியமான சில வீரர்களை எடுத்தால் இங்கிலாந்து அணி கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.இந்த தொடரில் இந்திய அணியில் உறுதியாக ஆட போகும் வீரர்கள் என்றால் அது கோலி, ரஹானே, பண்ட், பும்ரா, புஜாரா ஆகியோர்தான்.

மீதம் 6 பேர்
மீதம் உள்ள 6 வீரர்கள் யார் என்பதுதான் தற்போது கேள்வியாக உள்ளது. இந்த 6 வீரர்களின் தேர்வுதான் இந்திய அணியின் வெற்றிக்கு உதவும் என்று கூறப்படுகிறது. இந்த 6 பேரில் அஸ்வின், ரோஹித் சர்மா இரண்டு பேர் கண்டிப்பாக ஆடுவார்கள். அதேபோல் சுப்மான் கில் ஆட வேண்டும்.

ஓப்பனிங்
கில் மற்றும் ரோஹித் சர்மா இரண்டு பேர்தான் இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள். மீதம் உள்ளதில் வாஷிங்க்டன் சுந்தர், சிராஜ், இஷாந்த் சர்மா ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சமயத்தில் சிராஜுக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் கொண்டு வரப்படவும் வாய்ப்புள்ளது. அல்லது இஷாந்த் ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளது.

6 கேம் சேஞ்சர்ஸ்
இந்திய அணியில் ராகுல், மயங்க் அகர்வால், குல்தீப், அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் உள்ளனர். ஆனாலும் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள். இதனால் இந்திய அணியில் சுந்தர், சுப்மான் கில், சிராஜ் ஆகிய வீரர்கள் முக்கியமான கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு
நாளை மறுநாள் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்த நிலையில் நாளையே டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய அணியின் தேர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications