மிரண்டு போய் பார்த்த கோலி.. வேறு யாருமே வேண்டாம்.. இந்த தமிழக வீரர் போதும்..டிக் அடித்த இந்திய டீம்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக அணியில் ஆட போகும் ஸ்பின் ஆல் ரவுண்டர் யார் என்று விவரம் வெளியாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.

பயிற்சி
இந்த நிலையில் தற்போது இந்த தொடருக்கான வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய அணியில் இந்த தொடரில் இரண்டு ஸ்பின் பவுலர்கள் களமிறங்குவார்கள். அஸ்வின் இதில் ஆடுவது உறுதியாகிவிட்டது. அவர் கண்டிப்பாக ஆடுவார்.

வேறு யார்
இன்னொரு பக்கம் வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப், அக்சர் பட்டேல் ஆகியோரில் ஒருவரை அணியில் எடுக்க வேண்டும். இதில் வலைப்பயிற்சியில் குல்தீப் யாதவ் சரியாக ஆடவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் பேட்டிங்கும் இவர் செய்ய மாட்டார்.

சிறப்பு
இந்த நிலையில்தான் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் இடையே போட்டி நிலவி வருகிறது . பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடாத காரணத்தால் அக்சர் பட்டேல் சரியான பார்மில் இல்லை. இதனால் வலைப்பயிற்சியிலும் சரியான லைனில் பந்தன் வீச முடியாமல் இவர் திணறி இருக்கிறார்.

சுந்தர்
இதனால் இந்திய அணியில் ஸ்பின் ஆல் ரவுண்டர் வாய்ப்பு சுந்தருக்கு கிடைக்கும் என்கிறார்கள். இவர் மிகவும் சிறப்பாக பேட்டிங், பவுலிங் இரண்டும் செய்து இருக்கிறார். நேற்று இவர் செய்த பேட்டிங் வலைப்பயிற்சியை பார்த்து கோலி ஆடிப்போய் உள்ளார்.

ஓப்பனிங்
தமிழக அணியில் முதல்தர போட்டிகளில் சுந்தர் ஓப்பனிங் இறங்கி ஆடியவர். இதனால் அவரின் பேட்டிங் சிறப்பாக இருந்துள்ளது. அதேபோல் நேற்று பவுலிங்கிலும் ஆதிக்கம் செலுத்தி உள்ளார். இதனால் இவர்தான் அஷ்வினுடன் பவுலிங் செய்ய போகும் இன்னொரு ஸ்பின் பவுலர் என்று கோலி முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications