அட்டாக்கிங் திட்டத்தை கையிலெடுத்த கோலி.. அதிர போகும் இங்கிலாந்து.. சென்னை டெஸ்டுக்கு இதுதான் பிளான்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி வகுக்க போகும் பிளான்கள் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.
டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

பிளான்
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி வகுக்க போகும் பிளான்கள் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணி ஸ்பின் பவுலிங் அட்டாக்கைதான் அதிகம் பயன்படுத்தும் என்று இந்த தொடரில் கணிக்கப்பட்டுள்ளது. 2 ஸ்பின் பவுலர்களை கண்டிப்பாக இந்தியா பயன்படுத்தும்.

ஸ்பின்
இங்கிலாந்து அணியிடம் நல்ல ஸ்பின் பவுலர்கள் இல்லை. அதேபோல் சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங் செய்ய ஏற்ற பிட்ச். இதனால் சென்னையில் இங்கிலாந்து அணியை வீழ்த்த இந்திய அணி ஸ்பின் பவுலிங்கைதான் பயன்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் என்ன
ஆனால் கோலி ஸ்பீட் பவுலிங் அட்டாக்கிலும் கவனம் செலுத்துவார் என்கிறார்கள். சிராஜ், இஷாந்த் சர்மா ஆகியோரை வைத்து அதிக பவுன்சர்களை வீச வைப்பார். பும்ராவை வைத்து யார்க்கர் அட்டாக் செய்ய சொல்வார் என்கிறார்கள். இதன் மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய அணி திணற வைக்கும்.

இப்படித்தான் நடந்தது
இதற்கு முன் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர்களில் கோலி இதே யுக்தியைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். ஆஸ்திரேலிய பவுலர்கள் எப்படி இந்திய வீரர்களை தாக்குவது போல பந்து வீசுவார்களோ அதேபோல் இந்திய அணியும் அட்டாக்கிங் முறையில் பவுலிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்
இதனால் இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர் , அஸ்வின், பும்ரா, சிராஜ், இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணியில் ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது. சுந்தருக்கு பதிலாக சமயங்களில் அக்சர் பட்டேல் ஆட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications