Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடராஜனை வைத்து.. உலகக் கோப்பைக்கே பிளான் போட்ட கோலி.. நினைத்து பார்க்காத பேட்டி.. பின்னணி!

சிட்னி: இந்திய அணியில் அறிமுகமாகி சிறப்பாக ஆடி வரும் தமிழக வீரர் நடராஜன் குறித்து கேப்டன் கோலி அசத்தல் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்திய அணியில் இந்த வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக தமிழக வீரர் நடராஜன் உருவெடுத்துள்ளார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து நடராஜன் நம்பிக்கை கொடுத்தார்.

அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார். நேற்று நடந்த டி 20 போட்டியிலும் அவர் ஒரு விக்கெட் எடுத்தார்.

பேட்டி

பேட்டி

இந்திய அணியில் அறிமுகமாகி சிறப்பாக ஆடி வரும் தமிழக வீரர் நடராஜன் குறித்து கேப்டன் கோலி அசத்தல் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நடராஜன் குறித்து இங்கு குறிப்பிட வேண்டும். இந்திய அணியில் ஷமி, பும்ரா இரண்டு பேருமே இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பும்ரா ஆடியுள்ளார். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் நடராஜன் தன்னை நிரூபித்துள்ளார்.

பிரஷர்

பிரஷர்

அவர் மீது பிரஷர் இருந்த சமயத்திலும் கூட தன்னை யார் என்று நிரூபித்து இருக்கிறார். அவர் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. இதுதான் அவருக்கு முதல் சர்வதேச தொடர். ஆனால் அதற்கான அறிகுறியே அவரிடம் இல்லை.

கட்டுக்கோப்பு

கட்டுக்கோப்பு

அவர் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தார். நடராஜன் மிகவும் கடினமாக உழைக்க கூடிய வீரராக இருக்கிறார். அதேபோல் அவர் மிகவும் பணிவான குணம் கொண்டவராக இருக்கிறார். அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரிகிறது.

நடராஜன்

நடராஜன்

ஒவ்வொரு விஷயத்தையும் முன் நடராஜன் கட்டுக்கோப்பாக திட்டங்களை வகுக்கிறார். அவர் இதேபோல் கடினமாக உழைப்பார் என்று நம்புகிறேன். நடராஜன் இதே போல் தொடர்ந்து ஆட வேண்டும். இதேபோல் தன்னை மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

பவுலர்கள்

பவுலர்கள்

இடதுகை பவுலர்கள் எப்போதும் ஒரு அணிக்கு பொக்கிஷம் போன்றவர்கள். அடுத்த வருடம் டி 20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடராஜன் இதே போல ஆடினார் என்றால் சிறப்பாக இருக்கும் என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம்

அடுத்த வருடம்

இதன் மூலம் நடராஜனை அடுத்த வருடம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையில் களமிறக்க கோலி திட்டமிட்டு வருகிறார் என்று தெரிய வருகிறது. நடராஜன், பும்ரா, ஷமி ஆகிய மூன்று பேரை கோலி டி 20 உலகக் கோப்பைக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இதைதான்..நடராஜன் தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும் என்று கோலி சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, December 9, 2020, 21:54 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+