Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நோட் பண்ணிக்கோங்க.. அது நடக்கும்”.. நியூசி, அணிக்கு ஷிகர் தவான் கடும் எச்சரிக்கை.. சம்பவம் இருக்கு!

ஆக்லாந்து: நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியா ஏற்கனவே வென்று அசத்தியுள்ளது.

மழை பாதிப்புகள் அதிகளவில் இருந்த போதும் கூட ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1 - 0 என தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளன.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

இரு அணிகளும் மோதும் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் ஆக்லாந்தில் தொடங்கவுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் இல்லாததால், ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த தவானுக்கு, தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக நியூசிலாந்து தொடர் அமைந்துள்ளது.

ஷிகர் தவான் பேச்சு

ஷிகர் தவான் பேச்சு

இந்நிலையில் அதற்காக நியூசிலாந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், நியூசிலாந்து அணி நிலையான ஃபாரிமில் உள்ளது. சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துள்ளனர். ஆனால் இவை அனைத்தையுமே அடித்து நொறுக்கி இங்கு பேட்டிங் செய்வோம். டி20 கிரிக்கெட்டில் அதை செய்து தான் வெற்றி கண்டனர். அதே சூழலை ஒருநாள் கிரிக்கெட்டிலும் எடுத்து செல்வோம்.

கடும் எச்சரிக்கை

கடும் எச்சரிக்கை

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். இந்திய பேட்டர்கள் உங்களுக்கு எதிராக மிக கடுமையாக வரப்போகிறார்கள். எனக்கு ஓய்வு எடுக்க நிறைய காலங்கள் இருந்ததால் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். நான் அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் ஆடும் போது, நிறைய போட்டிகள் இருந்தது. ஆனால் தற்போது நல்ல புத்துணர்ச்சியுடன் சிறப்பாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

வாய்ப்பே கிடைக்கல

வாய்ப்பே கிடைக்கல

வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது குறித்து பேசிய தவான், நிறைய வீரர்கள் இருப்பது இந்திய அணிக்கு நல்ல விஷயம் தான். ஆனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் சரியான தகவல் பரிமாற்றம் இருந்தாலே அது அனைத்தையும் சரிசெய்துவிடும். வீரர்களும் நமக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் தயாராவார்கள் என தவான் கூறியுள்ளார்.

Story first published: Thursday, November 24, 2022, 10:20 [IST]
Other articles published on Nov 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+