உலக கோப்பையில் இடம் கிடைக்காததற்கு இந்திய அணி நிர்வாகம் தான் காரணம்.. தெறிக்கவிட்ட தமிழக வீரர்
லண்டன்: உலக கோப்பை அணியில் எனக்கு இடம் கிடைக்காததற்கு இந்திய அணி நிர்வாகம் தான் காரணம் என்று தினேஷ் கார்த்திக் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
15 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு, உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார் தினேஷ் கார்த்திக். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு திடீரென வாய்ப்பு அளிக்கப்பட்டது, ஆனால் அவரால் சோபிக்க முடியவில்லை.
இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தமிழக வீரர்கள் இரண்டு பேர். அதில் ஒருவர் விஜய் சங்கர். காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து அனுப்பி வைக்கப் பட்டார். மற்றொருவர் தினேஷ் கார்த்திக். உலக கோப்பை அணியில் இடம்பெற 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அணி நிர்வாகம்
இந்நிலையில் எனக்கு இடம் கிடைக்காததற்கு இந்திய அணி நிர்வாகம் தான் காரணம் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது: என்னுடைய ரோல் என்ன என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். 2வதாக பேட் செய்யும் போது நான் 7ம் நிலையில் இறங்கினால் சூழலுக்கு ஏற்ப எனது இன்னிங்சை கட்டமைக்க வேண்டும்.

ரன் விகிதம் உறுதி
முதலில் பேட் செய்தால் இறங்கும் போது தேவைப்படும் ரன் விகிதத்தை உறுதி செய்ய வேண்டும். இன்ன இடத்தில்தான் நான் களமிறங்க வேண்டும் என்பதையும், சூழ்நிலையை கணித்து என்னால் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் என் ரோல்.

காத்திருந்தேன்
இந்த ரோலை தான் இந்திய அணி நிர்வாகத்தினர் எனக்குத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இந்த வாய்ப்புக்காக தான் நான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான திட்டங்கள் வொர்க் அவுட் ஆகவில்லை. வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுவேன்.

சேசிங்கில் சிறந்த அணி
பிட்ச் மந்தமாக இருப்பதால் சில அணிகள் சேசிங் செய்வதில் தடுமாறுகின்றன. ஆனால் இந்திய அணி அந்த விஷயத்தில் சிறந்தது. ஒரு அணியாக நாங்கள் இலக்குகளை சேஸ் செய்யக்கூடியவர்கள் என்று நம்புகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications