Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் இப்படி ஆனது? இந்திய பவுலர்களை நோக்கி கோபமாக வந்த "கோச்".டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த காரசார விவாதம்!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய பவுலர்கள் நேற்று சரியாக பந்து வீசவில்லை என்ற பயிற்சியாளர் குழு கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று சென்னையில் துவங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலாந்து அணி 90 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 387 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 168 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

சென்னை

சென்னை

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய பவுலர்கள் நேற்று சரியாக பந்து வீசவில்லை என்ற பயிற்சியாளர் குழு கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. நேற்று போட்டியிலும் சரி, இன்றைய ஆட்டத்திலும் இந்திய பவுலர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. இந்திய பவுலர்கள் எல்லோரையும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிக எளிதாக எதிர்கொண்டனர்.

எதிர்கொண்டனர்

எதிர்கொண்டனர்

அஸ்வின், பும்ரா ஆகியோரும் கூட சரியாக பவுலிங் போட முடியாமல் கஷ்டப்பட்டனர் . இன்னொரு பக்கம் வாஷிங்க்டன் சுந்தர், நதீம் ஓவர்களில் மிக அதிகமாக ரன்கள் சென்றது. இதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் சென்னை பிட்ச்.

சென்னை பிட்ச்

சென்னை பிட்ச்

சென்னை பிட்ச் கொஞ்சம் கூட பவுலிங்கிற்கு ஒத்துழைக்காததுதான் பவுலர்கள் சொதப்ப காரணம் என்கிறார்கள். பந்து கொஞ்சம் கூட ஸ்விங், பவுன்ஸ் ஆகாமல் இருப்பதால் இந்திய பவுலர்கள் திணற தொடங்கி உள்ளனர். பிட்ச் ஒரு காரணம் என்றால் பவுலர்கள் கொஞ்சம் சொதப்பியதும் இதற்கு காரணம் ஆகும்.

 பவுலர்கள் சொதப்பல்

பவுலர்கள் சொதப்பல்

நேற்று நதீம், சுந்தர், இஷாந்த் சரியாக பவுலிங் செய்யவில்லை. சுந்தர், நதீம் சரியான லைனில் பந்து வீச முடியாமல் கஷ்டப்பட்டார் . அதேபோல் இஷாந்த் விக்கெட் எடுக்க கூடிய பந்துகளை வீசாமல் ஏமாற்றினார்.

கோபம்

கோபம்

இதனால் நேற்றைய ஆட்டத்திற்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் சாஸ்திரி, பாரத் அருண் உள்ளிட்டோர் டிரெஸ்ஸிங் ரூமில் கொஞ்சம் காட்டமாக பேசி உள்ளனர். பவுலர்கள் சரியாக பந்து வீசவில்லை என்ற கோபத்தை வெளிக்காட்டி உள்ளனர். இந்திய வீரர்கள் சொதப்பியது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

தவறு

தவறு

எங்கே தவறு நடந்தது, ஏன் சரியான லென்தில் பவுலிங் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதன்பின் பவுலர்களுக்கு இது தொடர்பாக அறிவுரை வழங்கி உள்ளனர். ஆனால் இன்றும் இந்திய பவுலர்களால் சிறப்பாக பவுலிங் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 6, 2021, 14:04 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+